எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க முயற்சி? – மம்தா பானர்ஜி 3 நாள் டெல்லி பயணம்!

Mamata Banerjee is leaving for Delhi today on a three-day visit as she tries to unite the opposition against the BJP.

பாஜகவுக்கு எதிராக எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்க முயற்சி செய்து வரும் நிலையில், 3 நாள் பயணமாக இன்று மம்தா பானர்ஜி டெல்லி செல்கிறார்.

மேற்குவங்கம் முதலமைச்சர் மம்தா பானர்ஜி 3 நாள் பயணமாக இன்று தலைநகர் டெல்லி செல்கிறார். எதிர்க்கட்சிகளின் முக்கிய தலைவர்களை இந்த பயணத்தின் போது மம்தா சந்திக்கவுள்ளார். காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியையும் சந்திப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்த பயணத்தின்போது வரும் புதன்கிழமை பிரதமர் மோடியும் சந்திக்க உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரேசின் சிறப்பு அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து பிரதமரிடம் பேசுவார் என எதிரிபார்க்கபடுகிறது.

2024ம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு எதிராக வலுவான எதிரணியை உருவாக்க மம்தா முயற்சி செய்து வருவதாக கூறப்படும் நிலையில், அவரது டெல்லி பயணம் முக்கியத்துவம் பெறுகிறது. எனவே, மக்களவை தேர்தலுக்கு முன் பாஜகவுக்கு எதிராக வலுவான கூட்டணியை உருவாக்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், இப்பயணத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்க நேரம் கேட்டிரு உள்ளதாகவும் கூறப்படுகிறது என்பது குறிப்பிடப்படுகிறது.

எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க முயற்சி? – மம்தா பானர்ஜி 3 நாள் டெல்லி பயணம்!