ஐஏஎஸ் அதிகாரிகள் 3 பேர் பணியிட மாற்றம் – தலைமைச் செயலாளர் உத்தரவு

The Chief Secretary has issued a divine order to transfer 3 IAS officers in Tamil Nadu.

தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழகத்தில் மூன்று ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, நில நிர்வாகம் கூடுதல் ஆணையராக இருந்த கே.எஸ்.பழனிசாமி மாற்றப்பட்டு மீன்வளத்துறை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கே.எஸ்.பழனிசாமி, கூடுதலாக மீன்வளத்துறை மேலாண் இயக்குனராக பொறுப்பு வகிப்பார் என கூறப்பட்டுள்ளது.

மீன்வளத்துறை ஆணையர் மற்றும் மேலாண் இயக்குனராக இருந்து வந்த கருணாகரன், பணியிட மாற்றம் செய்து பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுபோன்று பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை ஆணையர் பதவி வகித்த அதுல் ஆனந்த் மாற்றப்பட்டு தொழிலாளர் நல ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் கூடுதல் இயக்குனர் சரவணன், இனி கூடுதலாக தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் பொறுப்பையும் கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

unknown node