இன்று மம்தா பானர்ஜி டெல்லியில் சோனியா காந்தியை சந்திக்க உள்ளார்...!

Mamata Banerjee, who is on a five-day visit to Delhi, is scheduled to meet Sonia Gandhi in Delhi today.

5 நாள் சுற்றுப்பயணமாக டெல்லி சென்றுள்ள மம்தா பானர்ஜி இன்று டெல்லியில் சோனியா காந்தியை சந்திக்க உள்ளார்.

மேற்குவங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமாகிய மம்தா பானர்ஜி 5 நாள் சுற்றுப்பயணமாக டெல்லி சென்றுள்ளார். இந்நிலையில், டெல்லியில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் காங்கிரஸ் மூத்த தலைவர்களை சந்தித்து பேசிய பின்பு, மாலை 4 மணியளவில் பிரதமர் மோடி அவர்களையும் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசியிருந்தார்.

இன்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி அவர்களை சந்திக்க உள்ளார். இந்த ஆண்டு மே மாதம் மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்கு பின்பதாக மம்தா பானர்ஜி மற்றும் சோனியா காந்தி ஆகிய இரு தலைவர்களுக்கு இடையான முதல் சந்திப்பு இதுதான். இந்த சந்திப்பு இன்று மாலை 4.30 மணிக்கு சோனியா காந்தியின் இல்லத்தில் வைத்து நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.