அதிர்ஷ்டத்தால் மூன்று முறை முதலமைச்சரானவர் ஓ.பன்னீர்செல்வம் – மு.க.ஸ்டாலின்

Three-time Chief Minister O. Panneerselvam by luck -Dravida Munnetra Kazhagam Leader: M. K. Stalin says today

ஜெயலலிதா பதவியை ராஜினாமா செய்த பின்னர் தான் பன்னீர்செல்வம் முதலமைச்சாரானார் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

2021 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தல் வெகு விரைவில் நெருங்கிவரும் நிலையில், தற்போது அரசியல் கட்சிகள் தங்களுக்கான தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டன.திமுக சார்பில் அதிமுகவை நிராகரிப்போம் என்ற தலைப்பில் திமுக மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்றுதேனி மாவட்டம் போடி தொகுதி கொடுவிலார்பட்டி ஊராட்சியில் நடைபெறும்மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார்.அப்பொழுது அவர் பேசுகையில், அதிர்ஷ்டத்தால் மூன்று முறை முதலமைச்சரானவர் ஓ.பன்னீர்செல்வம்.ஊழல் வழக்கில் சிக்கி ஜெயலலிதா பதவியை ராஜினாமா செய்த பின்னர் தான் பன்னீர்செல்வம் முதலமைச்சாரானார்.ஜெயலலிதாவுக்கு முன்னே  நடித்துக் கொண்டிருந்தவர் பன்னீர்செல்வம் என்று தெரிவித்துள்ளார்.