புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸில் இருந்து மூன்று பேர் நீக்கம்.!

In Puducherry, three people, including a former minister, have been expelled from the NR Congress party.

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இருந்து முன்னாள் அமைச்சர் உட்பட 3 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் பி.ஆர்.சிவா, பிரகாஷ்குமார், நேரு ஆகியோர் நீக்கி என்.ஆர்.காங்கிரஸ் உத்தரவிட்டுள்ளது. வரும் சட்டப்பேரவை தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த 3 பேரையும் நீக்கி என்.ஆர்.காங்கிரஸ் நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் அதிமுக, பாஜக, என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன. இதில் என்.ஆர்.காங்கிரஸ் 16 தொகுதிகளில் போட்டியிடுகிறது. என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தட்டாஞ்சாவடி, ஏனாம் தொகுதிகளில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.