பொதுவாழ்வில் இருப்பவர்கள் தங்கள் மீது எந்த பழியும் ,குற்றச்சாட்டும் வராதவாறு செயல்பட வேண்டும்-மு.க.ஸ்டாலின்

With the Assembly elections in Tamil Nadu approaching, the Tamil Nadu constituency is heating up. The DMK and AIADMK are campaigning hard.

தமிழகத்திற்க்கான சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.திமுக மற்றும் அதிமுக தீவிர பரப்புரையை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் திமுக சார்பாக“உங்கள் தொகுதியில் ஸ்டாலின்”பொதுக்கூட்டம் இன்று நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் நடைபெற்றது.இதில் நெல்லையில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொதுவாழ்வில் இருப்பவர்கள் தங்கள் மீது எந்த பழியும் எந்த குற்றச்சாட்டும் வராதவாறு செயல்பட வேண்டும்.அவ்வாறு குற்றச்சாட்டு வந்தால் அதை எதிர்கொள்ளக்கூடிய துணிச்சல் பெற்றவராக இருக்க வேண்டும்.

அப்பொழுதுதான் மக்கள் மதிப்பார்கள் அப்படித்தான் நான் செயல்பட்டேன்,இனியும் செயல்படுவேன் என்று உறுதியளிக்கிறேன்.ஆனால் இன்றைக்கு முதலமைச்சராக  இருக்கக்கூடிய பழனிச்சாமிக்கு அப்படி ஏதாவது துணிச்சலுண்டா என்று கேள்வி எழுப்பினார்.