தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி 234 தொகுதிகளுக்கு பதிவானவாக்குகள் எண்ணும் பணியானது இன்று காலை 8 மணி முதல் தற்போது வரை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.தற்போதைய நிலவரப்படி,திமுக 159 தொகுதிகளில் முன்னிலையில் இருப்பதால் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும் தருவாயில் உள்ளது. சென்னை கொளத்தூர் தொகுதியில் திமுக சார்பில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் களமிறங்கினார்.அவரை எதிர்த்து அதிமுக சார்பில் ஆதிராஜாராம், அமமுக சார்பில் ஜெ.ஆறுமுகம், மக்கள் நீதி மய்யம் சார்பில் ஜெகதீஷ்குமார், நாம் தமிழர் கட்சி சார்பில் […]
தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை மிகுந்த எதிர்பார்ப்புடன் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கையில் பல சுற்றுகள் முடிவடைந்த நிலையில், ஆரம்பத்தில் இருந்து தற்போதுவரை திமுக முன்னிலை பெற்று வருகிறது. திமுக 153 இடங்களிலும், அதிமுக 80 இடங்களிலும், மக்கள் நீதி மய்யம் 1, நாம் தமிழர் கட்சி 0, அமமுக 0, என முன்னிலையில் உள்ளனர். இதில் திமுக நேரடியாக போட்டியிட்ட 119 இடங்களிலும், அதன் […]
தமிழக சட்டப்பேரவை தேர்தல் பணியில் ஈடுபடும் காவலர்கள் உட்பட இதர பணியாளர்களுக்கு இன்று முதல் தபால் வாக்கு செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனைதொடர்ந்து அமைதி முறையில் தேர்தல் நடைபெறவும், மக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதலாக பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது. இதற்கு போலீசார், துணை ராணுவத்தினர் ஈடுபடவுள்ளார். இந்நிலையில், தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் தபால் வாக்கு […]
கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அக்கட்சி பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், ஊடகங்கள் எந்தவொரு செய்தியை வெளியிடுவதாக இருந்தாலும், தலைமை கழகத்தை தொடர்புகொண்டு, அது உண்மையாக இருக்கும்பட்சத்தில் மட்டுமே வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தேர்தல் கூட்டணி குறித்து இனி என்னிடம் கேட்பதை விட, யார் இந்த கூட்டணிக்கு தலைமையோ (அதிமுக) அவர்களிடம் கேளுங்கள் என்றும்,அதிமுகவாக இருந்தாலும், திமுகவாக இருந்தாலும் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்றார்.சசிகலாவை சந்திக்கும் திட்டம் ஏதும் இல்லையெனவும் […]
தமிழகத்திற்க்கான சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.திமுக மற்றும் அதிமுக தீவிர பரப்புரையை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் திமுக சார்பாக “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” பொதுக்கூட்டம் இன்று நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் நடைபெற்றது.இதில் நெல்லையில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொதுவாழ்வில் இருப்பவர்கள் தங்கள் மீது எந்த பழியும் எந்த குற்றச்சாட்டும் வராதவாறு செயல்பட வேண்டும்.அவ்வாறு குற்றச்சாட்டு வந்தால் அதை எதிர்கொள்ளக்கூடிய துணிச்சல் பெற்றவராக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் மக்கள் […]
சென்னை:பெங்களூருவிலிருந்து சசிகலா வருகின்ற 8 ஆம் சென்னை வரவுள்ள நிலையில் மாவட்ட செயலாளர்கள்,அமைச்சர்களுடன் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இன்று மாலை 5 மணி அளவில் சென்னையில் உள்ள அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் வைத்து ஆலோசனை கூட்டம் நடத்துகின்றனர். சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் பெங்களூரு – பரப்பன அக்ரஹாராத்தில் உள்ள மத்திய சிறையில் தண்டனை பெற்று வந்த சசிகலா கடந்த 27-ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார்.கொரோனா தொற்று காரணமாக 11 நாட்கள் […]
மதுரை: முத்தரையர் வாழ்வுரிமை மாநாடு மதுரையில் நடைபெற்றது.இதில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு உரையாற்றினார்.அதில் முத்தரையர் மக்களின் குரலான வலையர் புனரமைப்பு நல வாரியம் அமைக்கப்படும். இந்த அரசு மக்களுடைய அரசு என்றும் மக்களின் எண்ணங்களை நிறைவேற்றுகின்ற அரசு என்று கூறினார். மதுரையில் முத்தரையர் வாழ்வுரிமை மாநாடு நடைபெற்றது.இதில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டார்.இந்த மாநாட்டிற்கு வீர முத்தரையர் முன்னேற்றச் சங்க நிறுவனர் கே.கே.செல்வகுமார் தலைமை வகித்தார் மாநாட்டில் உரையாற்றிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,முத்தரையர்கள் […]