இம்முறை எதிர்பார்ததற்கு முன்பாகவே மழை பெய்து வருகிறது என அமைச்சர் மூர்த்தி பேட்டி.
மதுரை திருப்பாலை அருகே நிரம்பி உடையும் நிலையில் உள்ள நாராயணபுரம் கம்மாயை அமைச்சர் மூர்த்தி ஆய்வு செய்தார். அதன்பின் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அப்போது பேசிய அவர், இம்முறை எதிர்பார்ததற்கு முன்பாகவே மழை பெய்து வருகிறது; தண்ணீர் தேங்கும் பகுதிகள், ஆக்கிரமிப்பு பகுதிகளில் பாதிப்பு ஏற்படாத விதமாக ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.