வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்யும் என்ற நிலையில், வடிகால் பணிகளை போர்க்கால அடிப்படையில் முழுமையாக நிறைவேற்றுவது அவசியம் என கே.பாலகிருஷ்ணன் ட்வீட். தமிழக அரசு தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்பிற்கான நிவாரணத் தொகையை அறிவித்துள்ளது. இந்த நிலையில், அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணத்தொகை போதுமானதாக இல்லை என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மழை வெள்ளத்தினால், தண்ணீர் புகுந்து பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கு தலா ரூபாய் 5,000 இழப்பீடு வழங்குக. சென்னை போன்ற நகரங்களில் திமுக […]
இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு. தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்ய […]
நீர் மேலாண்மையில் தமிழக அரசு கவனம் செலுத்தவில்லை என ஆர்.பி.உதயகுமார் குற்றசாட்டு. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையை பொறுத்தவரையில் பருவமழையை மேற்கொள்ள பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பருவமழையால் உயிரிழந்த 23 பேருக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், வடகிழக்கு பருவ மழையால் உயிரிழந்த 23 பேருக்கு நிவாரணம் […]
கடந்த ஆண்டு பருவமழையின் போது தண்ணீர் தேங்கிய இடங்களில் இந்த ஆண்டு தண்ணீர் தேங்கவில்லை என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் புளியந்தோப்பு மற்றும் பெரம்பூர் பகுதி இணைக்கும் வகையில் கட்டப்படும் ஸ்டீபன் சாலை மேம்பால பணியை ஆய்வு செய்தார். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் இந்த பாலத்திற்கான ஒப்பந்த பணி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இறுதி செய்யப்பட்டது. இப்பணியினை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரில் வந்து ஆய்வு செய்துள்ளார். […]
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நெல்லை வாங்குவதற்கு அரசு கொள்முதல் நிலையங்களை அதிக அளவில் திறக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து கே.எஸ்.அழகிரி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மழை பாதிப்புகளை கண்டறிந்து, மாநில அரசின் பேரிடர் மேலாண்மைத்துறை உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். கடலூர் மற்றும் டெல்டா மாவட்ட நிர்வாகத்தினர் முழு வீச்சில் உரிய நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டும். மழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் கடந்த 2021 ஆம் […]
எதிர்வரும் பருவமழையை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக மேயர் பிரியா பேட்டி. சென்னை மேயர் பிரியா அவர்கள் கொரட்டூர் ஏரியில் ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், எதிர்வரும் பருவமழையை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும், மழைநீர் வடிகால் பணிகள் மூலம் எங்களுக்கு நல்ல பயன் கிடைத்துள்ளது. இதனை தவிர்த்து மோட்டார்களை தயார் நிலையில் உள்ளது என தெரிவித்துள்ளார். மேலும், மழைக்காலத்திற்கு பின் சாலை அமைக்கும் பணி நடையப்பரும் என்றும் தெரிவித்துள்ளார்.
இன்று சென்னை முழுவதும் 200 வார்டுகளிலும் 200 மருத்துவ முகாம் நடத்தப்பட உள்ளது. அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று சென்னை முழுவதும் 200 வார்டுகளிலும் 200 மருத்துவ முகாம் நடத்தப்பட உள்ளது என தெரிவித்திருந்தார். அதன்படி இன்று சென்னை முழுவதும் 200 வார்டுகளிலும் 200 மருத்துவ முகாம் நடத்தப்பட உள்ளது. இந்த முகாமில் காய்ச்சல், சளி, இருமல் போன்ற பிரச்சினைகளுக்கு மருந்து வழங்கப்படும் மேலும் […]
நாளை சென்னை முழுவதும் 200 வார்டுகளிலும் 200 மருத்துவ முகாம் நடத்தப்பட உள்ளது. சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தமிழக அறிஞர் என்று சொல்லப்படும் நெடுஞ்செழியன் உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். இன்று அதிகாலை அவர் உயிரிழந்தார். இந்த நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள […]
மழை நீரை அகற்ற தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஜயகாந்த் கோரிக்கை. உரலுக்கு ஒரு பக்கம் இடி மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி என்பது போல தற்போது பெய்து வரும் மழையால் சென்னை மாநகர மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். சென்னை மக்களின் பிரச்சனைகளை தீர்க்கவும், மழை நீரை அகற்றவும் தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், […]
சென்னை, எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதல்வர் ஆய்வு. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னை, எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். இந்த ஆய்வின் போது, அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்டோரும் உடனிருந்தனர். இந்த ஆய்வின் போது, வடகிழக்கு பருவமழை குறித்த புகார்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
கனமழையை எதிர்கொள்ள கூடுதல் ஏற்பாடுகள் அவசியம் என்று மநீம அறிக்கை. தமிழகத்தில் தொடங்கியுள்ள நிலையில், சென்னையில் மழையால் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்ய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் இதற்கான பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம், ஒருநாள் மழைக்கே சென்னை தத்தளிப்பதாகவும், கனமழையை எதிர்கொள்ள கூடுதல் ஏற்பாடுகள் அவசியம் என்றும் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஒரு நாள் மழைக்கே தத்தளிக்கும் சென்னை! கனமழையை எதிர்கொள்ள கூடுதல் ஏற்பாடுகள் அவசியம்! […]
பருவ மழைக்காலத்தில் மக்களை பாதுகாக்க அரசு தவறிவிட்டது என ஆர்.பி.உதயகுமார் குற்றசாட்டு. அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், சென்னை மழைநீர் வடிகால் திட்டம் அரைகுறையான திட்டமாக இருக்கின்றது; சென்னையில் பெய்த சிறிய மழைக்கே அமைச்சர்கள் தான் ஓடிக்கொண்டிருக்கிறார்கள், வேலை ஓடுவதாக தெரியவில்லை. ஒரு சில இடங்களில் அவசர கதியில் மழைநீர் வடிகால் பணிகளை முடித்துள்ளார்கள்; சென்னையில் வடிகால் பணிகள் எந்த அளவிற்கு முடிந்துள்ளது என கேட்டால் 90% முடிந்துள்ளதாக கூறுகிறார்கள்.ஆனால் […]
மின்சாரம், பால், குடிநீர் உள்ளிட்டவை தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் உத்தரவு. வடகிழக்கு பருவமழை ஆயத்தப் பணிகள் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில், தலைமை செயலாளர், அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், மழைநீர் தேங்காதவாறு கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டியது அனைத்து மாவட்ட நிர்வாகத்தின் கடமையும், பொறுப்பும் ஆகும்; தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை முன்கூட்டியே மீட்க […]
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து காணொளி மூலமாக ஆலோசனை. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் வரும் 5-ஆம் தேதி வரை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து காணொளி மூலமாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள், மாவட்ட […]
வடகிழக்கு பருவமழை ஆயத்தப் பணிகள் தொடர்பாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழக அரசு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், வடகிழக்கு பருவமழை ஆயத்தப் பணிகள் தொடர்பாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெறுகிறது. தலைமைச்செயலகத்தில் நடக்கும் கூட்டத்தில் தலைமைச்செயலாளர் இறையன்பு உள்பட அனைத்து செயலாளர்களும் கலந்து கொண்டுள்ளனர். அனைத்துத்துறை செயலாளர்களுடனான ஆய்வுக்கூட்டம் முடிவடைந்தவுடன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெறவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
சென்னையில் கழிவுநீர் செல்லும் குழாய்கள் மற்றும் இயந்திர நுழைவாயில்களில் உள்ள கசடுகளை அகற்றி தூர்வாரும் பணிகள் நாளை முதல் நடைபெறும் என அறிவிப்பு. வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு அனைத்து பகுதிகளில் உள்ள தெருக்களில் கழிவுநீர் செல்லும் குழாய்கள் மற்றும் இயந்திர நுழைவாயில்களில் உள்ள கசடுகளை அகற்றி தூர்வாரும் பணிகள் நாளை முதல் 15ம் தேதி வரை நடைப்பெறும் சென்னை குடிநீர் […]
மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு மேற்கொண்ட தலைமை செயலாளர் இறையன்பு. தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், சென்னையில் பல இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அக்டோபர் 15ம் தேதிக்குள் மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில், தலைமை செயலாளர் இறையன்பு தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பம்மல், அனகாபுத்தூர் பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் […]
இன்று முதல் தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே சில மாவட்டங்களில், மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், இன்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளது. ஏற்கனவே வட தமிழக கடலோர பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகம் மற்றும் காரைக்கால் பகுதியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இம்முறை எதிர்பார்ததற்கு முன்பாகவே மழை பெய்து வருகிறது என அமைச்சர் மூர்த்தி பேட்டி. மதுரை திருப்பாலை அருகே நிரம்பி உடையும் நிலையில் உள்ள நாராயணபுரம் கம்மாயை அமைச்சர் மூர்த்தி ஆய்வு செய்தார். அதன்பின் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், இம்முறை எதிர்பார்ததற்கு முன்பாகவே மழை பெய்து வருகிறது; தண்ணீர் தேங்கும் பகுதிகள், ஆக்கிரமிப்பு பகுதிகளில் பாதிப்பு ஏற்படாத விதமாக ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.
காவிரி கரையோர பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மாநில பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவை சேர்ந்த 36 வீரர்கள் நாமக்கல் வருகை. தமிழகத்தில் பருவமழை தொடங்கவுள்ள நிலையில், சில மாவட்டங்களில் தற்போதே மழை பெய்து வருகிறது. மலையின் காரணமாக அணைகள் நிரம்பி வருகிறது. இந்த நிலையில், காவிரி கரையோர பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மாநில பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவை சேர்ந்த 36 வீரர்கள் நாமக்கல் மாவட்டத்திற்கு வருகை புரிந்துள்ளனர். கரையோர மக்களின் உதவிக்கு 04286 – 280007 […]