இது சனாதனப் புத்தியின் எச்சம்! தானென்ற ஆணவத்தின் உச்சம்! – திருமாவளவன்

தமிழக நிதியமைச்சர் குறித்து அண்ணாமலை அவர்கள் கூறிய கருத்துக்கு திருமாவளவன் ட்வீட்.

தமிழக நிதியமைச்சர் குறித்து அண்ணாமலை அவர்கள் கூறிய கருத்துக்கு திருமாவளவன் ட்வீட்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், ஒரு புகழ்பெற்ற பணக்கார குடும்பத்தில் பிறந்ததை தவிர, நீங்கள் உங்கள் வாழ்வில் ஏதேனும் உருப்படியாக செய்ததுண்டா? அரசியலுக்கும், மாநிலத்திற்கும் நீங்கள் ஒரு சாபக்கேடு. நீங்கள் என் செருப்புக்கு கூட சமமாக மாட்டீர்கள் என  தெரிவித்திருந்தார்.

இவரது பேச்சுக்கு கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில், விசிக தலைவர் திருமாவளவன் அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சமமில்லை என்பது தான் சனாதனம். அவன் சமமில்லை; அவள் சமமில்லை; அது சமமில்லை என்பதெல்லாம் காலம் காலமாகக் குருதியில் ஊறிக் கிடக்கும் சனாதனப் புத்தியின் எச்சம்!தானென்ற ஆணவத்தின் உச்சம்! முதிர்ச்சியின்மையின் முற்றம். சகிப்பின்மையின் குற்றம். அச்சத்தின் பாய்ச்சல்! அறியாமையின் கூச்சல்!’ ட்வீட் செய்துள்ளார்.

unknown node