"திருவள்ளுவரின் கோட்பாடுகள் அறிவுத்திறன்மிக்க நடைமுறைக்கேற்றவை" – பிரதமர் மோடி தமிழில் ட்வீட்!

"Thiruvalluvar's principles are intelligent and practical" - Prime Minister Modi tweeted in Tamil!

திருவள்ளுவர் தினத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்துவதாகவும்,அவரது கோட்பாடுகள் அறிவுத்திறன்மிக்க நடைமுறைக்கேற்றவை எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

வாழ்வியலுக்கு தேவையான வழிகளை ஒன்றரை அடிகளில் திருக்குறள் மூலம் போதித்த திருவள்ளுவரை போற்றும் வகையில் தை மாதம் 2 ஆம் நாள் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில்,தை மாதம் 2 ஆம் நாள் ஜனவரி 15 ஆம் தேதியான இன்று திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது.இந்நிலையில்,திருவள்ளுவர் தினத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்துவதாகவும்,அவரது கோட்பாடுகள் அறிவுத்திறன்மிக்க நடைமுறைக்கேற்றவை எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக,தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் தமிழில் கூறியதாவது:

“திருவள்ளுவர் தினத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவரது கோட்பாடுகள் அறிவுத்திறன்மிக்க நடைமுறைக்கேற்றவை. பன்முகத்தன்மை & அறிவுசார் ஆழத்திற்காக அவை தனித்து நிற்கின்றன. கடந்த ஆண்டு நான் கன்னியாகுமரியில் எடுத்த திருவள்ளுவர் சிலை & விவேகானந்தர் நினைவகத்தின் காணொலியை பகிர்கிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.

unknown node