Congress complaint: பிரிவினையை தூண்டும் வகையில் பிரதமர் மோடியின் பேச்சு இருப்பதாக கூறி அவருக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளது. இந்தியாவின் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரையில் 7 கட்டமாக நடைபெறுகிறது. முதற்கட்ட தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவை தொகுதிகளில் நடைபெற்றது. இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 26இல் நடைபெறுகிறது. ராஜஸ்தானில் மொத்தமுள்ள […]
இந்தியாவின் மிக நீளமான கடல் பாலமான மும்பை டிரான்ஸ் ஹார்பர் இணைப்பு, அடல் சேது என பெயரிடப்பட்டுள்ள, பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். மேலும், ரூ.30,500 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று மகாராஷ்டிராவில் தொடங்கி வைக்கிறார். அதில், ரூ.17,840 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நாட்டின் மிக நீண்ட கடல் பாலம் ‘அடல் சேது’. அடல் சேது இந்தியாவின் மிக நீளமான பாலம் மற்றும் நாட்டின் மிக நீளமான கடல் பாலம் […]
பிரதமர் மோடி அவர்கள் இன்று பெங்களூருவை தளமாகக் கொண்டு செயல்படும், பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார். அங்கு உற்பத்தி நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்தார். அதன்பின் பிரதமர் மோடி விமானப்படை வீரர்களுக்கான சீருடையை அணிந்துகொண்டு தேஜஸ் விமானத்தில் பயணம் செய்தார். இந்த பயணம் குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில், ‘தேஜஸ் விமானத்தில் ஒரு பயணம் வெற்றிகரமாக முடிந்தது. இந்த அனுபவம் நம்பமுடியாத […]
பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரதமர் மோடி குறித்து பேசியதற்கு டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தை முன் பாஜகவினர் போராட்டம். ஐநா சபையின் பாதுகாப்புக் கவுன்சில் ஆலோசனைக் கூட்டம் நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. இந்த ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்திற்கு இந்தியா தலைமை வகித்து வருகிறது. இந்த கவுன்சில் கூட்டத்தில் இந்திய வெளியுறவு துறை அமைச்சர் மற்றும் பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சர் இடையே கடுமையாக வார்த்தை போர் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில், பாகிஸ்தான் வெளியுறவுத் துறை […]
குளிர்கால கூட்டத்தொடரில் விவாதம் மிக ஆரோக்கியமாக இருக்க வேண்டும். – பிரதமர் மோடி. இன்று முதல் இம்மாதம் 29ஆம் தேதி வரையில் நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இந்த குளிர்கால கூட்டத்தொடரில் 16 மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளன. அதே போல , விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து எதிர்க்கட்சிகள், விவாதங்களை முன்னெடுக்கவும் தயாராக உள்ளன. இதனால், இந்த கூட்டத்தொடர் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இதுகுறித்து நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி பத்திரிகையாளர்களிடம் […]
காசி தமிழ்ச்சங்கமம் தனித்துவம் சிறப்பு வாய்ந்தது. காசி நகரம் பழமை வாய்ந்து. சிறப்பு வாய்ந்தது. அது போல, தமிழகமும் பழமை வாய்ந்தது, சிறப்பு வாய்ந்தது. காசி மக்களுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் நன்றி. – காசி தமிழ்ச்சங்கத்தில் பிரதமர் மோடி புகழாரம். வாரணாசியில் உள்ள பனராஸ் பல்கலைக்கழகத்தில், காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி வேட்டி சட்டை அணிந்து கலந்து கொண்டுள்ளார். மேலும், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி […]
இந்தியாவின் 15 வது குடியரசு தலைவருக்கான வாக்கு எண்ணிக்கையின் 3 வது சுற்றில் திரௌபதி முர்மு 2161 வாக்குகளாக அதன் மதிப்பில் 5,77,777 பெற்று முன்னிலையில் உள்ளார். இதன் மூலம் இந்தியாவின் 15வது குடியரசு தலைவராக பொறுப்பேற்க உள்ளார் திரௌபதி முர்மு. நாட்டின் புதிய குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட உள்ள திரௌபதி முர்முவுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவும் கலந்து […]
திருவள்ளுவர் தினத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்துவதாகவும்,அவரது கோட்பாடுகள் அறிவுத்திறன்மிக்க நடைமுறைக்கேற்றவை எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். வாழ்வியலுக்கு தேவையான வழிகளை ஒன்றரை அடிகளில் திருக்குறள் மூலம் போதித்த திருவள்ளுவரை போற்றும் வகையில் தை மாதம் 2 ஆம் நாள் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில்,தை மாதம் 2 ஆம் நாள் ஜனவரி 15 ஆம் தேதியான இன்று திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது.இந்நிலையில்,திருவள்ளுவர் தினத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்துவதாகவும்,அவரது கோட்பாடுகள் அறிவுத்திறன்மிக்க நடைமுறைக்கேற்றவை எனவும் பிரதமர் […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் மோடி ஆலோசனை. நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி அவரச ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். கடந்த சில மாதங்களாக குறைந்திருந்த கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்ததால், கொரோனா பாதிப்பு நிலவரம், தொற்று பரவலை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். தடுப்பூசி போடும் பணிகள், மருத்துவ […]
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக நாடாளுமன்றக் குழு கூட்டம் இன்று நடக்க உள்ளது. நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரின் இரு அவைகளும் கடந்த நவ.29ஆம் தேதி தொடங்கியது. இதற்கு ஒரு நாள் முன்பாகவே அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. அன்றே பிரதமர் மோடி தலைமையில் பாஜக எம்பிக்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, இரு அவைகளிலும் பாஜக எம்பிக்கள் தவறாமல் வர வேண்டும் என உத்தரவிட்டார். இதன் பின்னரும் சில பாஜக எம்பிக்கள் ஆப்சென்ட் ஆகியுள்ளனர். கடந்த […]
புகழ்பெற்ற எழுத்தாளர் பாபாசாகேப் புரந்தரே மறைவால் வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவு வேதனைப்படுகிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மராட்டிய மன்னன் சத்ரபதி சிவாஜி குறித்த தனது படைப்புகள் மூலமாக மிகவும் புகழ்பெற்ற மகாராஷ்டிர மாநிலத்தின் வரலாற்று ஆசிரியரும், எழுத்தாளருமானவர் தான் பாபாசாகேப் புரந்தரே. 2019 ஆம் ஆண்டு இவருக்கு இந்தியாவின் இரண்டாவது மிக உயரிய குடிமகன் விருதான பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது. நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த 99 வயதுடைய எழுத்தாளர் […]
பிரதமர் மோடி ராஜஸ்தான் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு 2 லட்சம் நிதி உதவி அறிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பார்மர் மற்றும் ஜோத்பூர் நெடுஞ்சாலையில் இன்று காலை டேங்கர் லாரி ஒன்று பேருந்து மோதி பெரும் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தின் போது பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பேருந்தில் இருந்த பயணிகள் 12 பேர் பரிதாபமாக தீயில் கருகி உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், ராஜஸ்தான் பார்மர் மற்றும் ஜோத்பூர் நெடுஞ் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமரின் […]
மிகுந்த அங்கீகாரம் பெற்ற உலகத்தலைவர்களில் பிரதமர் மோடி முதலிடத்தில் உள்ளார். அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனம் மிகுந்த அங்கீகாரம் பெற்ற உலக தலைவர்கள் குறித்த ஒரு ஆய்வை நடத்தியுள்ளது. இந்த ஆய்வில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், போரிஸ் ஜான்சன் உள்ளிட்ட உலக தலைவர்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி, இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் முதலிடம் பிடித்துள்ளார். 70% வாக்கு பெற்று நரேந்திர மோடி அவர்கள் உலகத் தலைவர்களில் மிகுந்த அங்கீகாரம் பெற்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். […]
ஜி 20 மாநாட்டில் கலந்து கொள்ள இத்தாலி சென்றுள்ள பிரதமர் மோடி வாடிகன் நகரில் போப் பிரான்சிஸை சந்தித்து பேசியுள்ளார். இந்தியா உட்பட 20 நாடுகள் அடங்கிய ஜி20 அமைப்பின் மாநாடு இத்தாலி நாட்டிலுள்ள ரோம் நகரில் இன்று மற்றும் நாளை நடைபெறுகிறது. இந்த 16வது ஜி 20 அமைப்பின் மாநாட்டில் இத்தாலிய பிரதமர் மரியோ அவர்களின் அழைப்புக்கு இணங்கி பிரதமர் மோடி அவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். இந்த மாநாட்டில்கொரோனாவுக்கு பின் ஏற்பட்ட பொருளாதார […]
குலாப் புயலை எதிர்கொள்ள தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என பிரதமர் மோடி ஆலோசனை. குலாப் புயல் முன்னெச்சரிக்கை தொடர்பாக ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். குலாப் புயலை எதிர்கொள்ள தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்றும் கூறியுள்ளார். மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலவி வந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நேற்று புயலாக மாறியது. இதற்கு பாகிஸ்தான் குலாப் என்று பெயர் […]
உங்களை வரவேற்க இந்திய மக்கள் காத்திருக்கிறார்கள் என அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸிடம் பிரதமர் மோடி கூறியுள்ளார். இன்று வாஷிங்டனில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளால் உருவாக்கப்பட்டுள்ள குவாட் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அமெரிக்காவுக்கு 4 நாள் சுற்றுப் பயணமாக சென்றுள்ளார். அங்கு அமெரிக்க அதிபர், துணை அதிபர் உள்ளிட்ட 5 உயர் அதிகாரிகளை தனித்தனியாக சந்தித்து பேசியுள்ளார். அமெரிக்கத் துணை அதிபரும், இந்திய […]
பிரதமர் மோடியின் பிறந்தநாளான இன்று குடியரசு தலைவர் மற்றும் குடியரசு துணை தலைவர் இருவரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் பிரதமர் மோடிக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீங்கள் ஆரோக்கியத்துடன் […]
இன்று செப்டம்பர் 11 அதாவது 9/11! உலக வரலாற்றில் மனிதகுலத்தை தாக்கியதாக அறியப்பட்ட ஒரு தேதி,மனிதகுலத்திற்கான மதிப்புகள் மூலமே இது போன்ற தாக்குதல்களை தவிர்க்க முடியும் -பிரதமர் மோடி கொடூரமான 9/11 இரட்டை கோபுர தாக்குதல் நடந்து இன்றுடன் 20 ஆம் ஆண்டு கடைபிடிக்கப்படுகிறது.இந்த தாக்குதல் பற்றி பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இது மனிதநேயத்தின் மீதான தாக்குதல் என்றும்,மனிதகுலத்திற்கான மதிப்புகளை புகுத்துவதன் மூலம் மட்டுமே இதுபோன்ற துயரங்களை தவிர்க்க முடியும் என்றார். “இந்த நாளில்,ஒரு நூற்றாண்டுக்கு […]
கடந்த ஏப்ரல்-மே மாதங்களில் நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை உச்சகட்டத்தை எட்டியது.இதனால்,கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.மேலும், மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. இதனையடுத்து,ஆக்சிஜன் உற்பத்தி மற்றும் விநியோகத்தை அதிகரிக்க மத்திய அரசு மாநிலங்களுடன் ஒருங்கிணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில்,கொரோனா மூன்றாவது அலை பரவ வாய்ப்புள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.ஆனால்,சில வெளிநாடுகளில் கொரோனா மூன்றாவது அலை பரவி வருகிறது. இந்நிலையில்,நாடு முழுவதும் மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தியை அதிகரிப்பது […]
போதைப் பொருளானது இருளையும்,அழிவையும் தருகின்றன என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினமாக ஜூன் 26 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அதன்படி, போதைப்பொருளை எதிர்த்துப் போராடும் மற்றும் உலகளாவிய போதைப்பொருள் பிரச்சினை குறித்த விழிப்புணர்வைப் பரப்பும் ஆர்வலர்கள் மற்றும் அமைப்புகளின் முயற்சிகளை இந்த நாள் குறிக்கிறது. இந்நிலையில்,போதைப்பொருள் துஷ்பிரயோகம் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தை முன்னிட்டு,பிரதமர் நரேந்திர மோடி போதைப்பொருளை எதிர்த்துப் போராடிய அனைவரையும் […]