CV Shanmugam : திருக்குறளை ஏன் தேசிய நூலாக பிரதமர் அறிவிக்கவில்லை என சி.வி.சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார் . திண்டிவனத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் அதிமுக பிரச்சார கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் உரையாற்றினார். அவர் பேசுகையில் பிரதமர் மோடி பற்றியும், திருக்குறள் பற்றியும் பல்வேறு கருத்துக்களையும், விமர்சனங்களையும் முன்வைத்தார். அவர் பேசுகையில், 10 வருடமாக மத்தியில் பாஜக ஆட்சி இருக்கிறது. நரேந்திர மோடி பிரதமராக இருக்கிறார். இதனால் அவர்தான் மகிழ்ச்சியாக இருக்கிறார். மக்கள் மகிழ்ச்சியாக […]
108 அதிகாரங்களில் உள்ள குறள்களை பாடத்தில் சேர்த்தது குறித்து தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு. தமிழகத்தில் 6 முதல் 12 வரை உள்ள வகுப்புகளில் திருக்குறளின் 108 அதிகாரங்களையும் சேர்க்கவேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 108 அதிகாரங்களில் உள்ள 1050 குறள்களையும் கற்பிக்க ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்டும் அரசு செயல்படுத்தவில்லை என மனுதாரர் ராம்குமார் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளில் தற்போது […]
ஆன்மிகம் என்பதை புரிந்து கொள்வதில் ஆளுநருக்கு சற்று சிரமம் இருக்கும் என்று கருதுகிறேன் என கே.எஸ்.அழகிரி ட்வீட். சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஆளுநர் ஆர்.என்.ரவி நமது ஆன்மிகத்தின் ஆதாரம் திருக்குறள் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில், ஆளுநரின் கருத்து குறித்து கே.எஸ்.அழகிரி ட்வீட் செய்துள்ளார். அந்த பதிவில், ஆளுநர் அவர்கள் ஒவ்வொரு குறளையும் படித்து அதனுடைய பொருளை புரிந்து கொள்ள முயற்ச்சித்து வருவது வரவேற்க்கத்தக்கது. ஆன்மிகம் என்பதை புரிந்து கொள்வதில் ஆளுநருக்கு சற்று […]
இந்துத்துவாவை தமிழ்நாட்டில் எப்படியாவது திணித்து விட வேண்டும் என துடிக்கும் சங்பரிவாரர்களுக்கு ஆளுநர் துணை போகிறார் என வைகோ பேச்சு. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், 14 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை தெரிவித்துள்ளார். மேலும், திருக்குறள் குறித்து ஆளுநர் தவறான தகவல்களை கூறி வருகிறார். ஜி.யூ.போப்பு திருக்குறளை சரியாக மொழிபெயர்த்திருக்கிறார்; இங்கு இருக்கிற கூட்டம் திட்டமிட்டு பேசி வருகின்றனர் அதற்கு ஆளுநர் துணை போவது மிகவும் […]
ஜூன் மாதத்தில் ஹிந்தி உட்பட 12 மொழிகளில் திருக்குறள் வெளியாகும் என செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் அறிவிப்பு. ஜூன் மாதத்தில் 12 மொழிகளில் திருக்குறள் வெளியிடப்படும் என செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்நிறுவனத்தின் இயக்குனர் சந்திரசேகர் கூறுகையில், திருக்குறளை மொழிப்பெயர்க்கும் பணிகள் முடிவடைந்து அச்சிடும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால், வரும் ஜூன் மாதத்தில் 12 மொழிகளில் திருக்குறள் வெளியிடப்படும் என கூறினார். அதன்படி, ஹிந்தி, சமஸ்கிருதம், மராத்தி, ஓடியா, நேபாளி, […]
திருக்குறளை தொடர்ந்து மணிமேகலையை உலக மொழிகளில் மொழிபெயர்ப்பதற்கான பணிகளை செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் தொடங்கியுள்ளது. திருக்குறளை தொடர்ந்து மணிமேகலையை உலக மொழிகளில் மொழிபெயர்ப்பதற்கான பணிகளை செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் தொடங்கியுள்ளது. சிங்களம், மலாய், சீனா, கொரியன், மங்கோலியன், ஜப்பான், உள்ளிட்ட 20 உலக மொழிகளில் மணிமேகலையை மொழிபெயர்க்கும் பணிகள் தொடங்கியுள்ளது. பௌத்த தத்துவங்களை பேசும் சங்ககால இலக்கியமான மணிமேகலையின் பெருமையை பௌத்தமதம் பரவலாக உள்ள இலங்கை, சீனா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளில் பரப்ப முயற்சிகள் […]
திருவள்ளுவர் தினத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்துவதாகவும்,அவரது கோட்பாடுகள் அறிவுத்திறன்மிக்க நடைமுறைக்கேற்றவை எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். வாழ்வியலுக்கு தேவையான வழிகளை ஒன்றரை அடிகளில் திருக்குறள் மூலம் போதித்த திருவள்ளுவரை போற்றும் வகையில் தை மாதம் 2 ஆம் நாள் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில்,தை மாதம் 2 ஆம் நாள் ஜனவரி 15 ஆம் தேதியான இன்று திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது.இந்நிலையில்,திருவள்ளுவர் தினத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்துவதாகவும்,அவரது கோட்பாடுகள் அறிவுத்திறன்மிக்க நடைமுறைக்கேற்றவை எனவும் பிரதமர் […]
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மை தேர்வு பாடத்திட்டத்தில் மீண்டும் திருக்குறளை சேர்த்து டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி (TNPSC) அறிவிக்கை செய்யப்படும் அனைத்துப் போட்டித் தேர்வுகளில் தமிழ்மொழித்தாள் கட்டாயமாக்கப்பட்டு,தமிழ் மொழியில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்த நிலையில், அதன் அடிப்படையிலான பாடத்திட்டம், மாதிரி வினாத்தாள் TNPSC இணையதளத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. இவ்வாறு இருக்க,டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்ட குரூப் 2 (Group II Main) பாடத்திட்டத்தில் இருந்து திருக்குறள் […]
தமிழக முன்னால் பாஜக தலைவரும் தற்போதைய தெலுங்கானா மாநில ஆளுநருமான திருமதி. தமிழிசை சவுந்திரராஜன்,அவர்கள் ஆளுநராக பொறுப்பேற்ற பிறகு, அந்த மாநில சட்டசபையின் முதல் கூட்டத் தொடரில் கலந்து கொண்டார். அப்போது அவரை அம்மாநில முதல்வர் சந்திரசேகரராவ், சபாநாயகர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.சட்டசபை கூட்டத்தில், அனைவருக்கும் வணக்கம் என தமிழில் துவங்கிய கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் , ஆங்கிலத்தில் உரையாற்றினார். தனது உரையை முடிக்கும் முன், ”உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேரா தியல்வது நாடு” என்ற திருக்குறளை […]
திருவண்ணாமலை வந்தவாசி அருகே அரசுப்பள்ளியில் 3 ம் வகுப்பு படிக்கும் மனைவி தர்ஷினி. 4 நிமிடம் 49 வினாடிகளில் 150 திருக்குறளை ஒப்புவித்து உலக சாதனை படைத்துள்ளார். கல்லாகுத்து கிராமத்தைச் சேர்ந்த ஆனைக்குட்டி – சத்யா தம்பதியின் மகள் தர்ஷினி. விவசாயக் குடும்பத்தில் பிறந்த தர்சினி அங்குள்ள அரசுப்பள்ளி ஒன்றில் 3ம் வகுப்பு படிக்கிறார். சிறு வயதில் இருந்தே திருக்குறளில் அதிகம் நாட்டம் கொண்ட மாணவி அதில் சாதனை படைத்துள்ளார். ஒன்றாம் படிக்கும் பொது 1 நிமிடத்தில் […]