அரசு பேருந்துகளில் திருக்குறள் பலகை.., 10 நாட்களுக்குள் முடிக்கப்படும்- அமைச்சர் ராஜகண்ணப்பன்..!

Minister Rajakannappan said that the work of setting up Thirukural and text on government buses will be completed within 10 days.

அரசு பேருந்துகளில் திருக்குறள், உரையுடன் அமைக்கும் பணிகள் 10 நாட்களுக்குள் முடிவடையும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் 7291 சாதாரண கட்டண பேருந்துகள் இயக்கப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் 702 குளிர்சாதன பேருந்துகள், வெளி மாநிலங்களுக்கு செல்லும் 1400 பேருந்துகளை தவிர மற்ற பேருந்துகள் அனைத்தும் இயக்கபப்டுகிறது என  போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.

டீசல் பேருந்துகளை விட 5 மடங்கு விலை அதிகமாக மின் பேருந்துகள் இருந்தாலும், அதன் பராமரிப்பு, டீசல் செலவு மிச்சமாகும் என தெரிவித்தார். அரசு பேருந்துகளில் திருக்குறள், உரையுடன் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. 10 நாட்களுக்குள் முடிவடையும் என கூறினார்.