இனிமேல் ஆவினில் இந்த பொருட்கள் விற்கப்படும்..! ஐந்து புதிய பொருட்களை அறிமுகம் செய்து வைத்த முதல்வர்..!

ஆவின் நிறுவனத்தின் தயாரிப்பான ஐந்து புதிய பொருட்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிமுகம் செய்து  வைத்துள்ளார்.

ஆவின் நிறுவனத்தின் தயாரிப்பான ஐந்து புதிய பொருட்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிமுகம் செய்து  வைத்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று தலைமைச் செயலகத்தில், ஆவின் நிறுவனத்தால் புதியதாக தயாரிக்கப்பட்ட பிரீமியம் மில்க் கேக், யோகர்ட் பானம் (மாம்பழம் மற்றும் ஸ்ட்ராபெரி சுவையில்), பாயாசம் மிக்ஸ், பால் புரத நூடுல்ஸ் மற்றும் டெய்ரி ஒய்ட்னர் ஆகிய ஐந்து புதிய பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் துரைமுருகன் மற்றும் நாசர் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராக திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்றவுடன், ஆவின் உற்பத்தி பொருட்கள் இலாபம் ஈட்ட வழிவகைகளை ஆராய வலியுறுத்தியதன் அடிப்படையில், அவின் நிறுவனம் பல்வேறு புதிய  உப பொருட்களை ஆவின் நிறுவனத்தின் மேம்பாட்டுக்காக அறிமுகப்படுத்தி வருகிறது.

unknown node