ஒரே ஆண்டில் ஆவின் பொருள்களின் விலையை 3 முறை உயர்த்தியபின், ஆவின் வருவாய் உயர்ந்துள்ளதாக தமிழக முதலவர் பாராட்டியுள்ளார் என அண்ணாமலை ட்விட். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவின் வருவாய் உயர்ந்துள்ளதாக கூறியதை விமர்சித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘ஒரே ஆண்டில் ஆவின் பொருள்களின் விலையை 3 முறை உயர்த்தியபின், ஆவின் வருவாய் உயர்ந்துள்ளதாக தமிழக முதலவர் பாராட்டியுள்ளார். ஆவின் நெய்யின் விலை மட்டும் கடந்த […]
ஆவின் பொருட்கள் விலை உயர்வுக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம். ஆவின் பால் விலை தொடர்ந்து நெய் விலை தற்போது வெண்ணெய் விலையை உயர்த்தி நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதற்கு அரசியல் பிரபலங்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழ்நாட்டில் ஆவின் வெண்ணெய் விலை அரை கிலோவுக்கு ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது. 100 கிராமுக்கு ரூ. 3 உயர்த்தப்பட்டிருக்கிறது. நெய் விலை நேற்று […]
ஆவின் பொருட்கள் விலை உயர்வுக்கு ஈபிஎஸ் கண்டனம். ஆவின் பால் விலை தொடர்ந்து நெய் விலை தற்போது வெண்ணெய் விலையை உயர்த்தி நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஆவின் நெய் விலையை ஒன்பது மாதத்தில் மூன்று முறை உயர்த்தி ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கும் இந்த விடியா அரசிற்கு எனது கடுமையான கண்டனங்கள், கடந்த மார்ச் மாதம் ரூ.515-க்கு கிடைத்த ஆவின் […]
கடந்த 9 மாதத்தில் மூன்று முறை ஆவின் பால் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது என அண்ணாமலை ட்விட். ஆவின் நிறுவனம் பால் விலையை தொடர்ந்து, ஆவின் நெய்யின் விலையை, கிலோவுக்கு ரூ.50 உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதற்க்கு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்து ட்விட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘ஆவின் பால் விலையை உயர்த்தி வாக்களித்த மக்களை வஞ்சித்து வந்த இந்த திறனற்ற திமுக அரசு, இது […]
ஆவின் பொருட்கள் விலை உயர்வு, மின்கட்டண உயர்வு ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து, தனது கண்டனத்தை அறிக்கை மூலம் வெளியிட்டுள்ளார் ஓ.பன்னீர்செல்வம். தமிழக அரசு கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஆவின் நிறுவனத்தின் சார்பாக தயாரிக்கப்படும் ஆவின் இனிப்பு பொருட்களின் விலை அண்மையில் கணிசமாக விலை உயர்த்தப்பட்டது. அதற்கு எதிர்க்கட்சிகள் தரப்பில் கண்டனங்கள் எழுந்தன. அந்த வகையில், ஓ.பன்னீர்செல்வம் தனது எதிர்ப்பை தனது டிவிட்டர் பக்கம் வாயிலாக அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். அதில் குறிப்பிட்டு இருப்பதாவது, ‘ ஆவின் நிறுவனத்தால் […]
ஆவின் பொருட்களின் மீதான GST-யை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓபிஎஸ் அறிக்கை. தரமான மற்றும் சரியான ஆவின் பால் பாக்கெட்டுகளை பொதுமக்களுக்கு விற்பனை செய்வதில், தனிக்கவனம் செலுத்தி “ஆவின் பொருட்களின் மீதான GST-யை தடுக்கவும்” GST விதிப்பிற்கு மேல் விலை உயர்த்தப்படுவதை ரத்து செய்யவும் உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும் என ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், கடந்த சில நாட்களாகவே ஆவின் பால் அளவு குறைவாக […]
திமுக அரசு ஆவின் பொருட்களின் விலையுயர்வை திரும்ப பெறுமாறு வேண்டுகோள் விடுத்து சசிகலா அறிக்கை. உணவுப்பொருட்கள் மீது 5% ஜிஎஸ்டி வரி விதிப்பால் தயிர், மோர், லஸ்ஸி, நெய் உள்ளிட்டவற்றின் விலையை ஆவின் நிர்வாகம் உயர்த்தியுள்ளது. தற்போது இருந்து வரும் விலையைவிட சற்று அதிகரித்துள்ளது. இந்த நிலையில், சசிகலா அவர்கள் திமுக அரசு ஆவின் பொருட்களின் விலையுயர்வை திரும்ப பெறுமாறு வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘திமுக அரசு ஆவின் பொருட்களுக்கு விலையை வரலாறு […]
ஆவின் பொருட்களின் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்தினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், தயிர் உள்ளிட்ட பால் பொருட்களின் விலையை ஆவின் நிறுவனம் உயர்த்தியிருப்பது கண்டனத்திற்குரியது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிந்தவுடன் மக்களை வதைக்கும் வேலையை தி.மு.க அரசு ஆரம்பித்திருக்கிறது. சாமானிய மற்றும் நடுத்தர மக்களை பாதிக்கும் இந்த விலை உயர்வை உடனடியாக திரும்பப்பெறவேண்டும்.’ என பதிவிட்டுள்ளார்.
ஆவின் நிறுவனத்தின் தயாரிப்பான ஐந்து புதிய பொருட்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிமுகம் செய்து வைத்துள்ளார். தமிழக முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று தலைமைச் செயலகத்தில், ஆவின் நிறுவனத்தால் புதியதாக தயாரிக்கப்பட்ட பிரீமியம் மில்க் கேக், யோகர்ட் பானம் (மாம்பழம் மற்றும் ஸ்ட்ராபெரி சுவையில்), பாயாசம் மிக்ஸ், பால் புரத நூடுல்ஸ் மற்றும் டெய்ரி ஒய்ட்னர் ஆகிய ஐந்து புதிய பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் […]