Bomb Threat : சென்னை தலைமை செயலகத்திற்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. Read More – அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டில் ரெய்டு! சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை வெடிகுண்டு வெடிக்கும் என தனியார் தொலைக்காட்சிக்கு செல்போன் மூலம் மிரட்டல் அழைப்பு வந்துள்ளது. இந்த அழைப்பு குறித்து மாநில கட்டுப்பாட்டு அறை மற்றும் சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More – போராட்டத்தில் […]
தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த கனமழையின் தாக்கம் இன்னும் பல்வேறு இடங்களில் நீடித்து கொண்டு இருக்கிறது. உதவிக்காகவும், மீப்பு பணிகளுக்காகவும், உணவுக்காவும் இன்னும் மக்கள் தவித்து வரும் சூழல் நிலவுகிறது. அவர்களை மீட்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தவித்து வரும் மக்களை மீட்பு படையினர் மீட்டு வருகின்றனர். வெள்ளத்தால் தனி தீவில் சிக்கியவர்களை போல் தவித்து வரும் மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. மீட்ப பணிகளை நேற்று முதல்வர் […]
தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. அண்டை நாடுகளில் மீண்டும் கொரோனா அதிகரிக்க தொடங்கியதன் காரணமாக மத்திய அரசு மாநில அரசுகளுக்கு இதற்கான விழிப்புணர்வையும், வழிகாட்டு நெறிமுறைகள் குறித்தும் அறிவுறுத்தியது. இந்நிலையில் தற்போது, சென்னையில் தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், தலைமை செயலர் இறையன்பு, உள்துறை செயலர் பணீந்திர ரெட்டி, காவல்துறை டிஜிபி சைலேந்திர […]
மாநில வாளர்ச்சியில் முக்கியம் கிராமப்புற வளர்ச்சி ஆகும். அதற்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். – முதல்வர் மு.க.ஸ்டாலின். சென்னை தலைமை செயலகத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழகத்தில் செயல்படுத்தபட்டு வரும் திட்டங்கள் குறித்து ஆலோசனைகள் நடைபெற்றன. இதில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘ மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி என்பது பொருளாதார குறியீடு மட்டும் இல்லை. மக்களின் வாழ்க்கை தரம் மற்றும் மக்களின் வளர்ச்சியை உள்ளடக்கியது. […]
சென்னை தலைமைச் செயலகத்தில் விமலா என்ற பெண் தீக்குளிக்க முயற்சி. சென்னை தலைமைச் செயலகத்தில் தனது பூர்வீக சொத்து மீட்டு தர கோரி 48 வயது மதிக்கத்தக்க கும்பகோணத்தை சேர்ந்த விமலா என்ற பெண் ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்த காவல்துறையினர் உடனடியாக அவரை தடுத்து நிறுத்தினர். காவல்துறையினர் அவரை மீட்டு தண்ணீர் ஊற்றி காப்பாற்றினர். முதலமைச்சரின் தனிப்பிரிவில் இது தொடர்பாக மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் தீக்குளிக்க முயற்சி செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அனைத்து துறை சார்ந்த செயலாளர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மாலை 6 மணி அளவில், அனைத்து துறை சார்ந்த செயலாளர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். ஒவ்வொரு துறை சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள், திட்டங்கள் குறித்து விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
சென்னை சேப்பாக்கத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் வழங்கும் உதவித் தொகையை ரூ.1,500 லிருந்து ரூ.3000 ஆக உயர்த்த கோரி மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாற்றுத்திறனாளிகள் போராட்டம் சென்னை சேப்பாக்கத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் வழங்கும் உதவித் தொகையை ரூ.1,500 லிருந்து ரூ.3000 ஆக உயர்த்த கோரி மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மிகவும் வறுமையில் உள்ளவர்களுக்கு மாதம் ரூ.5000 உதவித்தொகை வழங்க வேண்டும் என கோரிக்கையை முன் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தலைமை செயலகத்தை முற்றுகையிட […]
ஆவின் நிறுவனத்தின் தயாரிப்பான ஐந்து புதிய பொருட்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிமுகம் செய்து வைத்துள்ளார். தமிழக முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று தலைமைச் செயலகத்தில், ஆவின் நிறுவனத்தால் புதியதாக தயாரிக்கப்பட்ட பிரீமியம் மில்க் கேக், யோகர்ட் பானம் (மாம்பழம் மற்றும் ஸ்ட்ராபெரி சுவையில்), பாயாசம் மிக்ஸ், பால் புரத நூடுல்ஸ் மற்றும் டெய்ரி ஒய்ட்னர் ஆகிய ஐந்து புதிய பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் […]
சென்னை தலைமை செயலகத்தில் முதல்வரின் தனிப்பிரிவு அருகே பெரிய மரம் சாய்ந்து விழுந்ததில், காவலர் கவிதாவின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். தமிழகத்தில் பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அந்த வகையில் சென்னையிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் முதல்வரின் தனிப்பிரிவு அருகே பெரிய மரம் சாய்ந்து விழுந்தது. இதில், அரக்கோணத்தை சேர்ந்த பெண் காவலர் கவிதா உயிரிழந்துள்ளார். மேலும், பெரியமரம் […]
சென்னை தலைமை செயலகத்தில் முதல்வரின் தனிப்பிரிவு அருகே பெரிய மரம் சாய்ந்து விழுந்தது. இதில், பெண் காவலர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தமிழகத்தில் பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அந்த வகையில் சென்னையிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் முதல்வரின் தனிப்பிரிவு அருகே பெரிய மரம் சாய்ந்து விழுந்தது. இதில், அரக்கோணத்தை சேர்ந்த பெண் காவலர் கவிதா உயிரிழந்துள்ளார். மேலும், பெரியமரம் சாய்ந்து விழுந்ததில் ஒரு போக்குவரத்து காவலர் காயமடைந்த […]
காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணனுடன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். அரை மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனையில் அரசு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனும் கலந்து கொண்டார். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட சீராய்வு மனு தொடர்பாகவும், காவிரி வழக்கில் மத்திய அரசுக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணை குறித்தும் இதில் ஆலோசிக்கப்பட்டது. காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் […]