"இவர்கள் உங்களுள் ஒருவர்;வெற்றி பெறச் செய்யுங்கள்" – 6 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட ம.நீ.ம.தலைவர் கமல்ஹாசன்!

"These are one of you; make them win" - MNM leader Kamal Haasan releases 6th phase candidate list!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்ய வேட்பாளர்களின் 6-ஆவது பட்டியலை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற பிப்ரவரி 19 ஆம் தேதி நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து,தேர்தல் பணிகளில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில்,மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் போட்டியிட இருக்கும் வேட்பாளர்களின் 5-வது பட்டியல் வரை கமல்ஹாசன் அவர்கள் முன்னதாக வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில்,நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்ய வேட்பாளர்களின் 6-வது பட்டியலை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் வெளியிட்டுள்ளார்.

மேலும்,வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் கமல்ஹாசன் அவர்கள் கூறியுள்ளதாவது:

“நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்ய வேட்பாளர்களின் 6-ஆவது பட்டியலை வெளியிடுகிறேன்.இவர்கள் உங்களுள் ஒருவர் என்பதும் உங்களுக்கான ஒருவர் என்பதும் இவர்களின் தனித்தகுதிகள். தகுதி மிக்க இவர்களை வெற்றி பெறச் செய்வது உங்கள் கடமை”,என்று தெரிவித்துள்ளார்.

unknown node
"இவர்கள் உங்களுள் ஒருவர்;வெற்றி பெறச் செய்யுங்கள்" – 6 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட ம.நீ.ம.தலைவர் கமல்ஹாசன்!