சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அக்கட்சி தலைவர் கமல்ஹாசன், கட்சி மூத்த நிர்வாகிகள் உட்பட சுமார் 2500 பேர் கலந்து கொண்டனர். இன்றைய பொதுக்கூட்டத்தில் மக்கள் நீதி மய்ய கட்சியின் நிரந்தரத் தலைவராக கமல்ஹாசன் தேர்வு செய்யப்பட்டது, தேர்தல் வயதை குறைக்க வலியுறுத்துவது, தமிழ்நாட்டிற்கு உரிய நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டன. […]
சென்னை : இன்று மக்கள் நீதி மய்ய கட்சியின் 2வது பொதுக்கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட மூத்த ம.நீ.ம கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர். மக்களவை தேர்தல் முடிந்து நடைபெறும் ம.நீ.ம கட்சியின் முதல் பொதுக்கூட்டமான இதில், கட்சி பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என சுமார் 2500 பேர் கலந்து கொண்டனர். இந்த பொதுக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டன. அதில் […]
Kamal Haasan : திமுகவுடன் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான அட்டவணையை தலைமை தேர்தல் ஆணையம் வரும் வாரங்களில் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் நெருங்கி வரும் பிரதான கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு, பரப்புரை என விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறது. Read More – கரும்பு விவசாயி தான் […]
மக்கள் நீதி மய்யம் 7-ஆம் ஆண்டு தொடக்க விழாவை தொடந்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் கமல்ஹாசன் கட்சி கொடியை ஏற்றி வைத்து பேசினார். அப்போது ” இந்திய தேர்தல் ஆணையம் ஒரு வேட்பாளர் 95 லட்சம் ரூபாய் செலவு செய்யலாம் என கூறுகிறது. தேர்தலில் 95 லட்சம் மட்டும் செலவு செய்தால் என்ன ஆகும், கோவை தெற்கு தான் ஆகும். நான் கோவையில் தோல்வியடைந்தது 1,728 ஓட்டுகள் அல்ல எனது தோல்வியாக நான் கருதுவது […]
மக்கள் நீதி மய்யத்தின் 7ஆம் ஆண்டு தொடக்க விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, கட்சியின் தொடக்க விழாவையொட்டி இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கட்சி கொடியை ஏற்றி வைத்து, செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார். அப்போது கமல்ஹாசன் கூறியதாவது, மக்கள் நீதி மய்யம் இன்று ஏழாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. கட்சி ஆரம்பிக்கப்பட்ட குறுகிய காலத்திலேயே இருபெரும் தேர்தலை எதிர்கொண்டுள்ளோம். பணம் பலமோ, ஊடக பலமோ, […]
மக்கள் நீதி மய்யம் பொதுச்செயலாளர் அருணாச்சலம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் “வரும் பிப்ரவரி 21 (21-2-2024) நமது மக்கள் நீதி மய்யத்தின் 7-ம் ஆண்டு துவக்க நாளாகும். அந்த நாளை சிறப்புடன் கொண்டாடும் வண்ணம் அன்று காலை 10 மணியளவில், கமல்ஹாசன் சென்னை ஆழ்வாா்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில், மக்கள் நீதி மய்யக் கொடியினை ஏற்றிவைத்து தொண்டர்களிடையே சிறப்புரையாற்ற உள்ளார். அந்த நிகழ்வை சிறப்பிக்கும் பொருட்டு நிர்வாகக்குழு, செயற்குழு உறுப்பினர்கள், அமைப்பு மற்றும் அணிகளைச் சேர்ந்த மண்டல, […]
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தொடர்பான நிலைப்பாட்டை இன்னும் இரண்டு நாட்களில் நல்ல செய்தியுடன் உங்களை சந்திக்கிறேன் என்று நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைமைவருமான கமல்ஹாசன் கூறியுள்ளார். தமிழகத்தை பொறுத்தவரை மக்களவை தேர்தலுக்கான பணியில் அனைத்து பிரதான கட்சிகளும் ஆயுதமாகி வருகிறது. இந்த முறை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், அதிமுக மற்றும் பாஜக தனித்தனியே கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி தான், கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் தேர்வு, தேர்தல் […]
நாடாளுமன்ற தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ‘டார்ச் லைட்’ சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. இந்திய நாடாளுமன்றத்திற்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது, தமிழ்நாட்டை பொறுத்தவரையில் மொத்தம் 39 நாடாளுமன்ற தொகுதிகள் அமைந்துள்ளன. இங்குள்ள பல முக்கிய கட்சிகள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி போன்ற கட்சிகள் உள்ளன. திமுக கூட்டணியில் மக்கள் […]
நாடாளுமன்ற தேர்தலுக்கான மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் பணி ஒருங்கிணைப்புக் குழு அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கான பணியில் பல்வேறு கட்சிகள் முழுவீச்சில் இறங்கியுள்ளன. திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பணி ஒருங்கிணைப்பு குழுவை அறிவித்து தேர்தல் தொடர்பான பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. அந்த வகையில் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கியுள்ளது. அதன்படி தேர்தல் பணி ஒருங்கிணைப்புக் குழுவை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இந்த 6 […]
மழை, வெள்ளத்துக்குப் பயந்து ஓடிப்போய் எங்கோ பதுங்கிக் கொண்ட எடப்பாடி பழனிசாமி, களத்தில் நிற்கும் நம்மவரை விமர்சிப்பதா? என மக்கள் நீதி மய்யம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் தலைநகரம் புயல் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது, எங்கோ ஒடிப்போய் பதுங்கிக் கொண்ட எதிர்க்கட்சித் தலைவர், மக்கள் நலனுக்காக களத்தில் நிற்கும் நம்மவரை பச்சோந்தி என்று விமர்சித்திருப்பது கேலிக்கூத்தாக இருக்கிறது. மக்கள் நீதி மய்யமும், அதன் தொண்டர்களும் சென்னையின் பல்வேறு […]
மிக்ஜம் புயல் மழையால் சென்னை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. வரலாறு காணாத மழை கொட்டி தீர்த்தத்தால் நகரின் பல்வேறு இடங்களில் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி, வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பெரும்பான்மையான இடங்களில் மழைநீர் வடிந்த நிலையில், சில இடங்களில் மழைநீர் வடியாமல் உள்ளது. அதுமட்டுமில்லாமல், உணவு, குடிநீர், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் தவித்து வருகின்றனர். மழை வெள்ளத்தில் சிக்கிய மக்களை […]
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் நாளை மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. நடிகர் கமல்ஹாசன் தலைவராக உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கிய ஆலோசனை கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இதில், வரும் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை, கூட்டணி, வியூகங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிகிறது இந்த ஆலோசனை கூட்டத்தில் அவசர நிர்வாக குழு உறுப்பினர்கள், மாவட்ட செயல்குழு, மாவட்ட செயலாளர்கள் ஆகியோர் கலந்து […]
நாளை (14-ந்தேதி) உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் சார்பாக, சென்னை ஆழ்வார்பேட்டையில் “கமல் பிலட் கம்யுன்” பெயரில் புதிய திட்டம் தொடங்கப்பட்டது. இதை, தொடங்கி வைத்த நிகழ்வில் விக்ரம் படத்தில் இடம்பெற்றிருந்த “பத்தல பத்தல” பாடலின் வரிகள் குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் பேசியுள்ளார். அதில் பேசிய கமல்ஹாசன் ” உலகத்தை நம் சந்ததியினருக்கு விட்டுச் செல்வது நம் கடமை. உண்மையில் நடப்பவை பற்றிதான் நான் “விக்ரம் […]
தமிழகத்தில் மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் இல்லாமல் எந்த ஒரு இடத்திலும் கடை திறந்து மது விற்பனை செய்ய முடியாது என்றும்,மதுக்கடை அமைப்பதற்கு மக்களிடமிருந்து எதிர்ப்பு வரும் பட்சத்தில் அதை ஆட்சியர் பரிசீலித்து தகுந்த முடிவை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசு முன்னதாக உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில்,டாஸ்மாக் வருமானம் இனிக்கிறது,கிராமசபை தீர்மானம் கசக்கிறதா? என்று மக்கள் நீதி மய்யத்தின் மாநில செயலாளர் செந்தில் ஆறுமுகம் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக தனது அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: டாஸ்மாக் […]
மக்கள் நீதி மய்யத்தின் அடுத்தக்கட்ட செயல்திட்டங்கள் குறித்து நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் இன்று மாலை ஜூம் செயலி வாயிலாக உரையாற்றுகிறார். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த பிப்.19 ஆம் தேதி நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து,தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் பிப்.22 ஆம் தேதி நடைபெற்ற நிலையில்,முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி,நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெரும்பாலான இடங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளே வெற்றி பெற்றது.ஆனால், மக்கள் நீதி மய்யம்,அமமுக,நாம் தமிழர் உள்ளிட்ட சில […]
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்ய வேட்பாளர்களின் 6-ஆவது பட்டியலை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற பிப்ரவரி 19 ஆம் தேதி நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து,தேர்தல் பணிகளில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில்,மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் போட்டியிட இருக்கும் வேட்பாளர்களின் 5-வது பட்டியல் வரை கமல்ஹாசன் அவர்கள் முன்னதாக வெளியிட்டிருந்தார். இந்நிலையில்,நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் […]
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் போட்டியிட இருக்கும் வேட்பாளர்களின் 4-வது பட்டியலை கமல் வெளியிட்டார். தமிழகத்தில் ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் போட்டியிட இருக்கும் வேட்பாளர்களின் 4-வது பட்டியலை கமல் வெளியிட்டார். இதுகுறித்து தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக நகர்ப்புற உள்ளாட்சித் […]
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் போட்டியிட இருக்கும் வேட்பாளர்களின் 3வது பட்டியலை மக்கள் வெளியிட்டார் ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன். இதுகுறித்து தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பாகப் போட்டியிட இருக்கும் வேட்பாளர்களின் மூன்றாவது பட்டியலை மகிழ்ச்சியுடன் வெளியிடுகிறேன். நேர்மையும், திறமையும், தூய்மையும் கொண்ட இவர்களை வெற்றி பெறச் செய்யுங்கள் என்றும் தெரிவித்துள்ளார். சென்னை, தாம்பரம், மதுரை மாநகராட்சிகளுக்கான வேட்பாளர்களும் ஓசூர், […]
நமது நாட்டின் 73-வது குடியரசு தினத்தை முன்னிட்டு,இந்திய அரசியலமைப்புச் சட்டமே நம் ஒவ்வொருவரின் பலம் எனக் கூறி,மக்கள் அனைவருக்கும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் குடியரசு தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். நமது இந்திய நாட்டின் 73-வது குடியரசு தினவிழா இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.அந்த வகையில்,குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் குடியரசு தின விழா சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் நடைபெற்றது. ஆனால்,கொரோனா பரவல் காரணமாக,பொதுமக்களுக்கு அனுமதி […]
சென்னை:உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் காவல் ஆணையம் அமைக்க விதிகள் திருத்தப்பட்டதா? என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி. உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் தமிழ்நாடு காவல் ஆணையம் அமைக்க விதிகள் திருத்தப்பட்டதா? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.மேலும்,விதிகள் திருத்தப்பட்டதா? என ஜனவரி 31 ஆம் தேதிக்குள் தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையில்,நீதிமன்றத்தின் கேள்விக்கு பதில் அளித்த தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர்,காவல் ஆணையம் அமைக்க உயர்நீதிமன்ற […]