Kamal Haasan : நான் மக்கள் மீது கொண்ட காதல் சாதாரணமானது அல்ல, அதையும் தாண்டி புனிதமானது என கமல்ஹாசன் பிரச்சாரத்தில் குறிப்பிட்டார். தமிழகத்தில் இன்னும் சில வாரங்களில் மக்களவை தேர்தல் வரவுள்ளதால், அரசியல் தலைவர்கள் வெகு தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன், நேற்று திருச்சி மக்களவை தொகுதி மதிமுக வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். நேற்று […]
Vanathi Srinivasan: நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் திமுகவுடனான கூட்டணியை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் இன்று உறுதி செய்தார். மநீம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று திமுக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து பேசிச்சுவார்தை நடத்தினார். Read More – திமுகவுக்கு ஆதரவு.. மக்களவையில் நான் போட்டியிடவில்லை.! – கமல்ஹாசன் அறிவிப்பு.! இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் கமல்ஹாசன் கூறியதாவது, திமுக கூட்டணியில், மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு […]
DMK-MNM : மக்களவை தேர்தல் தொடர்பான கூட்டணி பேச்சுவர்த்தையில் பிரதான கட்சிகள் வெகு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சி பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கம்யூனிஸ்ட் கட்சிகள் , விசிக, மதிமுக, முஸ்லீம் லீக் கட்சிகளை தொடர்ந்து இன்று மக்கள் நீதி மய்ய கட்சியும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. Read More – திமுக கூட்டணியில் தொடரும் இழுபறி… காங்கிரஸ் தேசிய தலைவர்கள் சென்னை வருகை.! மநீம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று […]
Kamal Haasan : திமுகவுடன் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான அட்டவணையை தலைமை தேர்தல் ஆணையம் வரும் வாரங்களில் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் நெருங்கி வரும் பிரதான கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு, பரப்புரை என விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறது. Read More – கரும்பு விவசாயி தான் […]
மக்கள் நீதி மய்யம் 7-ஆம் ஆண்டு தொடக்க விழாவை தொடந்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் கமல்ஹாசன் கட்சி கொடியை ஏற்றி வைத்து பேசினார். அப்போது ” இந்திய தேர்தல் ஆணையம் ஒரு வேட்பாளர் 95 லட்சம் ரூபாய் செலவு செய்யலாம் என கூறுகிறது. தேர்தலில் 95 லட்சம் மட்டும் செலவு செய்தால் என்ன ஆகும், கோவை தெற்கு தான் ஆகும். நான் கோவையில் தோல்வியடைந்தது 1,728 ஓட்டுகள் அல்ல எனது தோல்வியாக நான் கருதுவது […]
மக்கள் நீதி மய்யத்தின் 7ஆம் ஆண்டு தொடக்க விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, கட்சியின் தொடக்க விழாவையொட்டி இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கட்சி கொடியை ஏற்றி வைத்து, செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார். அப்போது கமல்ஹாசன் கூறியதாவது, மக்கள் நீதி மய்யம் இன்று ஏழாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. கட்சி ஆரம்பிக்கப்பட்ட குறுகிய காலத்திலேயே இருபெரும் தேர்தலை எதிர்கொண்டுள்ளோம். பணம் பலமோ, ஊடக பலமோ, […]
மக்கள் நீதி மய்யம் பொதுச்செயலாளர் அருணாச்சலம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் “வரும் பிப்ரவரி 21 (21-2-2024) நமது மக்கள் நீதி மய்யத்தின் 7-ம் ஆண்டு துவக்க நாளாகும். அந்த நாளை சிறப்புடன் கொண்டாடும் வண்ணம் அன்று காலை 10 மணியளவில், கமல்ஹாசன் சென்னை ஆழ்வாா்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில், மக்கள் நீதி மய்யக் கொடியினை ஏற்றிவைத்து தொண்டர்களிடையே சிறப்புரையாற்ற உள்ளார். அந்த நிகழ்வை சிறப்பிக்கும் பொருட்டு நிர்வாகக்குழு, செயற்குழு உறுப்பினர்கள், அமைப்பு மற்றும் அணிகளைச் சேர்ந்த மண்டல, […]
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தொடர்பான நிலைப்பாட்டை இன்னும் இரண்டு நாட்களில் நல்ல செய்தியுடன் உங்களை சந்திக்கிறேன் என்று நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைமைவருமான கமல்ஹாசன் கூறியுள்ளார். தமிழகத்தை பொறுத்தவரை மக்களவை தேர்தலுக்கான பணியில் அனைத்து பிரதான கட்சிகளும் ஆயுதமாகி வருகிறது. இந்த முறை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், அதிமுக மற்றும் பாஜக தனித்தனியே கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி தான், கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் தேர்வு, தேர்தல் […]
தமிழ் சினிமாவில் மிக முக்கிய நடிகராக வலம் வரும் நடிகர் விஜய், பல ஆண்டுகளாகவே தனது ரசிகர் மன்றங்களை விஜய் மக்கள் இயக்கம் என தன்னார்வ அமைப்பாக மாற்றி தமிழகத்தில் பல்வேறு சமயங்களில் பொதுமக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். தன்னார்வ அமைப்பாக செயல்பட்டு வந்த இந்த இயக்கத்தை நேற்று அரசியல் கட்சியாக பதிவு செய்து தனது அரசியல் பயணத்தையும் ஆரம்பித்து விட்டார் விஜய். விஜய் அரசியல் எதிர்காலம் எப்படி இருக்கும் என சொல்ல முடியாது.! […]
கமல்ஹாசன் கடந்த 2018 ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கினார். மக்கள் நீதி மய்யம் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தலை சந்தித்துள்ளது. இதுவரை மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் ஒருவர் கூட மக்கள் பிரதிநிதிகளாக தேர்வாகவில்லை. இந்தநிலையில் வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் தேசிய அளவிலான ஒரு கூட்டணி இடம் மக்கள் நீதி மய்யம் இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பெண்களுக்கான பல்வேறு திட்டங்கள்.. மாநில மகளிர் கொள்கைக்கு ஒப்புதல் அளித்த தமிழக […]
அதீத கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட் தென்மாவட்ட மக்களுக்கு அரசு பல்வேறு நிவாரண உதவிகளை அளித்து வருவது போல பல்வேறு அரசியல் கட்சியினரும், தன்னார்வலர்களும் தங்களால் முடிந்த உதவிகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு அளித்து வருகின்றனர். தற்போது பெரும்பாலான பகுதிகளில் இயல்பு நிலை திரும்பினாலும், இன்னும் பல்வேறு இடங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் தேவைப்படுகிறது. அதனை அறிந்து அவர்களுக்கு உதவிகள் தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது. இன்று மக்கள் நீதி மய்யம் சார்பில் 12 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் வெள்ள […]
மழை, வெள்ளத்துக்குப் பயந்து ஓடிப்போய் எங்கோ பதுங்கிக் கொண்ட எடப்பாடி பழனிசாமி, களத்தில் நிற்கும் நம்மவரை விமர்சிப்பதா? என மக்கள் நீதி மய்யம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் தலைநகரம் புயல் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது, எங்கோ ஒடிப்போய் பதுங்கிக் கொண்ட எதிர்க்கட்சித் தலைவர், மக்கள் நலனுக்காக களத்தில் நிற்கும் நம்மவரை பச்சோந்தி என்று விமர்சித்திருப்பது கேலிக்கூத்தாக இருக்கிறது. மக்கள் நீதி மய்யமும், அதன் தொண்டர்களும் சென்னையின் பல்வேறு […]
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் நாளை மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. நடிகர் கமல்ஹாசன் தலைவராக உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கிய ஆலோசனை கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இதில், வரும் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை, கூட்டணி, வியூகங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிகிறது இந்த ஆலோசனை கூட்டத்தில் அவசர நிர்வாக குழு உறுப்பினர்கள், மாவட்ட செயல்குழு, மாவட்ட செயலாளர்கள் ஆகியோர் கலந்து […]
பழுதடைந்த பள்ளிக் கட்டிடங்களை உடனடியாக சீரமைக்க வேண்டும் என மநீம வலியுறுத்தல். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள அல்லிகுண்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கட்டிடம் பழுதடைந்த நிலையில் உள்ளதை கண்டித்தும், புதிய கட்டிடம் கட்டித் தரக்கோரி வலியுறுத்தியும் மாணவ மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. உடனடியாக பள்ளி கட்டிடங்களை சீரமைக்கவும், புதிய கட்டிடங்களை கட்டவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. […]
ஆளும்கட்சிக்கொடி பறக்கலாம்… அடுத்த கட்சிக்கொடி பறக்கக்கூடாதா? பாகுபாடு பார்க்கும் அரசுக்கு கண்டனம் என மநீம அறிக்கை. திண்டுக்கல் மாநகராட்சி பொன்னகரம் பகுதியில் ஏற்கனவே நடப்பட்ட மக்கள் நீதி மய்யக் கொடிக்கம்பமானது அந்தப் பகுதியில் கழிவுநீர் கால்வாய் தோண்டும் பணிக்காக அகற்றப்பட்டது. தற்போது அந்தப் பணி முடிந்த நிலையில், அந்தக் கொடிக் கம்பத்தை மீண்டும் அந்தப் பகுதியில் அமைக்கப் போகும்போது காவல் துறையினர் அதைத் தடுத்து நிறுத்தி உள்ளனர். இந்த நிலையில், இதுகுறித்து ஆளும்கட்சிக்கொடி பறக்கலாம்… அடுத்த கட்சிக்கொடி […]
மக்கள் நீதி மய்யத்தின் கொடியை ஏற்றவிடாமல் தடுத்த திண்டுக்கல் காவல்துறையைக் கண்டித்து மநீம ட்விட். மக்கள் நீதி மய்ய கட்சியின் ட்விட்டர் பக்கத்தில், ‘மக்கள் நீதி மய்யத்தின் கொடியை ஏற்றவிடாமல் தடுக்கும் திண்டுக்கல் காவல்துறையைக் கண்டிக்கிறோம். திண்டுக்கல் மாநகராட்சி பொன்னகரம் பகுதியில் ஏற்கனவே நடப்பட்ட மக்கள் நீதி மய்யக் கொடிக்கம்பமானது அந்தப் பகுதியில் கழிவுநீர் கால்வாய் தோண்டும் பணிக்காக அகற்றப்பட்டது. தற்போது அந்தப் பணி முடிந்து, இன்று மநீம மாநிலச் செயலாளர் அவர்களின் தலைமையில் அந்தக் கொடிக் […]
அரசுப்பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் பகுதிநேர சிறப்பாசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என மநீம வலியுறுத்தல். தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் பகுதிநேர சிறப்பாசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசை மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது. அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிறப்பு ஆசிரியர்களாகப் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள், உடற்கல்வி, ஓவியம், கணினி, இசை, தையல், தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல் […]
இன்று மாற்றுத்திறனாளிகள் தினம் அனுசரிக்கப்படும் நிலையில், மக்கள் நீதி மய்யம் சார்பில் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அந்த வாழ்த்து குறிப்பில், ‘உடல் தடையைத் தளராத மன உறுதியால் தகர்த்து, வாழ்க்கைப் போராட்டத்தில் வெற்றி காணும் அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் மக்கள் நீதி மய்யம் சார்பில் உலக மாற்றுத் திறனாளிகள் தின வாழ்த்துகள். விடாமுயற்சி, பயிற்சியால் பல்வேறு துறைகளில் வியத்தகு சாதனைபுரியும் போராளிகளுக்குப் பாராட்டுகள். மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள், சலுகைகளைத் தட்டிப் பறிக்காமல், அனைவருக்கும் பிரத்யேக அடையாள அட்டை, உதவித்தொகை, […]
பிறந்த நாளை ஒரு நாளில் கொண்டாடுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை. வாழ்க்கையை கொண்டாட வேண்டும் கமலஹாசன் தெரிவித்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மையம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கமலஹாசன் அவர்கள் தனது 68வது பிறந்த நாளை முன்னிட்டு தொண்டர்கள் மற்றும் அரசர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், என்னுடைய வயது எண்ணிக்கை எனக்கு கௌரவத்தை சேர்க்காது. மையத் தோழர்கள் செய்திருக்கும் நற்பணிகளின் எண்ணிக்கை தான் எனக்கு கௌரவத்தை சேர்க்கும் என […]
ஜெகநாதன் குடும்பத்தினருக்கு மக்கள் நீதி மய்யம் இரங்கல் தெரிவித்து ட்வீட். கரூர் மாவட்டம் க.பரமத்தி, குப்பம் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜெகநாதன், சட்டவிரோத கல்குவாரிகள் தொடர்பாக கனிமவளத் துறை அதிகாரிகளிடம் புகார் அளித்து, நடவடிக்கை எடுக்கச் செய்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த கல் குவாரி கும்பலால் அவர் லாரி ஏற்றிக் கொல்லப்பட்டுள்ளார். இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஜெகநாதன் குடும்பத்தினருக்கு மக்கள் நீதி மய்யம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. இந்தப் படுபாதகச் […]