#Breaking:700 ஆயுள் தண்டனைக் கைதிகளை முன்கூட்டியே விடுவிக்கலாம் – தமிழக அரசு அரசாணை!

The TN Govt has announced the early release of 700 prisoners on the occasion of the 113th birth anniversary of Perarignar Anna.

சென்னை:பேரறிஞர் அண்ணாவின் 113 வது பிறந்த நாளையொட்டி 700 ஆயுள் தண்டனைக் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

பேரறிஞர் பெருந்தகை அறிஞர் அண்ணா அவர்களின் 113 வது பிறந்த நாளையொட்டி 700 ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று தமிழக சட்டப் பேரவையில் கடந்த 13.09.2021 அன்று முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருந்தார்.

இந்நிலையில்,சிறைக் கைதிகளின் முன்விடுதலை நோடர்பான சட்டம் மற்றும் விதிகளுக்குட்பட்டு,மறைந்த பேரறிஞர் அண்ணா அவர்களின் 113 வது பிறந்த நாளானது வருகிற 15-ஆம் தேதியன்று வரும் நிலையில்,இந்திய அரசியலமைப்பின் 161 வது பிரிவின் கீழ் நீண்ட காலம் சிறை வாசம் அனுபவித்து வரும் 700 ஆயுள் தண்டனைக் கைதிகளின் தண்டனையை நல்லெண்ணம் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் குறைத்து முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

ஆனால்,வன்கொடுமை,பயங்கரவாதம்,பாலியல் வன்கொடுமை,மதம் மற்றும் சாதி மோதலில் ஈடுபட்டவர்கள் விடுவிக்கப்படமாட்டர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

unknown node
#Breaking:700 ஆயுள் தண்டனைக் கைதிகளை முன்கூட்டியே விடுவிக்கலாம் – தமிழக அரசு அரசாணை!