இந்த கண்ணீரில் இருந்து வெளிவரும் நிராகரிப்பு உணர்வு பிரதமரின் கர்வத்தை உடைக்கும் என ராகுல் காந்தி ட்வீட்.
மத்திய அரசு கொண்டுவந்த அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக பல்வேறு எதிர்ப்புகள் எழுந்து வரும் நிலையில், இளைஞர்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இப்போராட்டம் வடமாநிலங்களில் தீவிரமடைந்துள்ள நிலையில், போராட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் தடியடி நடத்தி வருகின்றனர்.
ரயில்களுக்கு தீ வைப்பது மட்டுமல்லாமல், பாஜக தலைவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் சூறையாடப்பட்டுள்ளன. இந்த நிலையில், ராகில் காந்தி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கடந்த இரண்டு வருடங்களாக இராணுவ வேலைக்கு ஆட்சேர்ப்பு நடக்கவில்லை.
4 வருட ஒப்பந்த அடிப்படையில் அக்னிவீர் திட்டத்தைக் கொண்டு வந்து நாட்டுக்கு சேவை செய்ய காத்திருந்த இளைஞர்களின் கனவுகளை உடைத்து விட்டீர்கள். இந்த கண்ணீரில் இருந்து வெளிவரும் நிராகரிப்பு உணர்வு பிரதமரின் கர்வத்தை உடைக்கும்.’ என பதிவிட்டுள்ளார்.
unknown node