இலங்கைக்கு நிவாரண பொருட்கள் அனுப்பிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த இலங்கை பிரதமர்.
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு வறுமையில் வாடும் மக்களுக்கு உதவும் வண்ணமாக, தமிழக அரசு சார்பில், அரிசி, பால் பவுடர், மருந்து பொருட்கள் உள்ளிட்டவற்றை அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த பொருட்கள் இலங்கையை சென்றடைந்துள்ள நிலையில், மனிதாபிமான அடிப்படையில், இலங்கைக்கு உதவி கரம் நீட்டிய தமிழக முதல்வருக்கும், தமிழக மக்களுக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளதாக, இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
unknown node