நடப்பாண்டில் 61,000 மெட்ரிக் டன் பயறு வகைகளை கொள்முதல் செய்ய திட்டம்..!

An allocation of Rs. 45.97 crore to control lentil prices and save lentil farmers.

பயிறு வகை விலையை கட்டுப்படுத்த, பயிறு விவசாயிகளை காப்பாற்ற ரூ.45.97 கோடி ஒதுக்கீடு.

நேற்று தொடங்கிய தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இந்நிலையில், இன்று இரண்டாவது சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது.

இதில், முதன்முறையாக தனி வேளாண் பட்ஜெட்டை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார். அதில்,

சென்னையில் வேளாண் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.

உணவு உற்பத்தியாளர்கள் குழுக்களுக்கு வேளாண் இயந்திரங்கள் வாங்க மூலதன நிதியாக ரூ 5 லட்சம் வழங்கப்படும். இந்த திட்டத்திற்கு ரூ.59.50 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

பயிறு வகை விலையை கட்டுப்படுத்த, பயிறு விவசாயிகளை காப்பாற்ற ரூ.45.97 கோடி ஒதுக்கீடு.

பனங்கருப்பட்டி காய்ச்சும் நவீன இயந்திரம் கொள்முதல் செய்ய மானியம் வழங்கப்படும்.

30 மாவட்டங்களில் 76 லட்சம் பனை விதைகள் நட மானிய விலையில் விநியோகம் செய்யப்படும்.

பனை மரங்களை வெட்டும் சூழல் வந்தால் மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்று வெட்ட வேண்டும்.

நடப்பாண்டில் துவரை, உளுந்து, பச்சைப் பயறு போன்ற பயறு வகைகளை 61,000 மெட்ரிக் டன் அளவிற்கு கொள்முதல் செய்ய திட்டம்.

திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நாளொன்றுக்கு 50 மெட்ரிக் டன் திறனுள்ள பருத்தி விதை நீக்கும் இயந்திரம் நிறுவப்படும் என தெரிவித்தார்.