தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட் மீதான விவாதங்களுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பதில். தமிழக சட்டப்பேரவை கடந்த 13ம் தேதி சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் தொடங்கியது. கடந்த 13-ஆம் தேதி பொது பட்ஜெட் தாக்கல், 14-ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், கடந்த 16-ஆம் தேதி முதல் பொது பட்ஜெட் மீதான விவாதம் நேற்றுவரை நடைபெற்றது. இந்த, இன்று தொடங்கியுள்ள தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் மீதான விவாதங்களுக்கு அமைச்சர் […]
100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாளாக உயர்த்தி,வேளாண்மையை யாரைக்கொண்டு செய்வீர்கள்? என்று தமிழக அரசுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் முதல் முறையாக நேற்று சட்டசபையில் வேளாண் துறைக்கென பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வேளாண் இ-பட்ஜெட்டை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சட்டப்பேவையில் தாக்கல் செய்தார்.அதில்,பல முக்கிய அம்சங்கள் இடம் பெற்றன. இந்நிலையில்,இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில்,”நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவை […]
தமிழக அரசின் வேளாண்மை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தி.மு.க சொன்னது ஒன்று, செய்திருப்பது வேறு என டிடிவி தினகரன் விமர்சனம். இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேளாண்மைக்கு தனி பட்ஜெட் என்றவுடன் தமிழகத்தில் விவசாயத்தையும், விவசாயிகளையும் உயர்த்தும் அளவுக்கு தொலைநோக்கு பார்வை கொண்ட மிகப்பெரிய செயல்திட்டத்தை தமிழக அரசு வெளியிடும் என்று அனைத்து தரப்பினரிடமும் ஏற்பட்ட எதிர்பார்ப்பு பொய்யாகி இருக்கிறது. ஏனெனில், வழக்கமான நிதிநிலை அறிக்கையில் இருந்து சில அம்சங்களைப் பிரித்தெடுத்து […]
கிருஷ்ணகிரியில் தோட்டக்கலை கல்லூரி புதிதாக தொடங்குவதற்கு முதற்கட்ட நிதியாக ரூ.10 கோடி ஒதுக்கீடு. இன்று இரண்டாவது நாள் நடைபெற்ற தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில், வேளாண் மற்றும் உழவர்த்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். வேளாண் பட்ஜெட்டை தாக்கல் உரையின்போது, தமிழ் வழியில் பயிலும் மாணவர்களின் வசதிக்காக தமிழில் வேளாண் மற்றும் தோட்டக்கலை கல்வி அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவித்தார். கோவை மாவட்டம் வேளாண் பல்கலைக்கழகத்தில், தமிழ் வழியில் வேளாண்மை, தோட்டக்கலை கல்வி அறிமுகம் செய்யப்படும் […]
கொல்லிமலை மிளகு போன்ற சிறப்பு பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் முதன்முறையாக தனி வேளாண் பட்ஜெட்டை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.அதில்,பல முக்கிய அம்சங்கள் இடம் பெற்றன. இதற்கிடையில்,கொல்லிமலை மிளகு போன்ற சிறப்பு பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் கூறியதாவது: “ஈரோடு மஞ்சள்,மதுரை […]
50 உழவர் சந்தைகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து புதுப்பொலிவுடன் செயல்பட அடிப்படை வசதிகள் மேம்படுத்த ரூ.12 கோடியே 50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு. தமிழகத்தில் முதன்முறையாக தனி வேளாண் பட்ஜெட்டை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அதில், 50 உழவர் சந்தைகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து புதுப்பொலிவுடன் செயல்பட அடிப்படை வசதிகள் மேம்படுத்த ரூ.12 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மாநில அரசு நிதியில் அமைக்கப்படும். கடலூர், திண்டுக்கல், […]
பயிறு வகை விலையை கட்டுப்படுத்த, பயிறு விவசாயிகளை காப்பாற்ற ரூ.45.97 கோடி ஒதுக்கீடு. நேற்று தொடங்கிய தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இந்நிலையில், இன்று இரண்டாவது சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. இதில், முதன்முறையாக தனி வேளாண் பட்ஜெட்டை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார். அதில், சென்னையில் வேளாண் அருங்காட்சியகம் அமைக்கப்படும். உணவு உற்பத்தியாளர்கள் குழுக்களுக்கு […]
தமிழ்நாடு அரசின் வரலாற்றில் முதன்முறையாக தனி வேளாண் பட்ஜெட்டை உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் தொடங்கி, அந்த கூட்டத்தொடரில் தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, நேற்று சட்டப் பேரவையில் தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இந்த நிலையில், இன்று இரண்டாவது சட்டப்பேரவை கூட்டத்தொடர் […]