எச்.ராஜா போன்றவர்கள் கட்சியில் இருக்கும் வரை தமிழகத்தில் தாமரை மலராது – சந்திரன்!

Karaikudi BJP leader Chandran, who was expelled from the party, has said that the lotus will not bloom in Tamil Nadu as long as people like H. Raja are in the party.

எச்.ராஜா போன்றவர்கள் கட்சியில் இருக்கும் வரை தமிழகத்தில் தாமரை மலராது என கட்சியிலிருந்து நீக்கப்பட்ட காரைக்குடி நகர பாஜக தலைவர் சந்திரன் அவர்கள் கூறியுள்ளார்.

தேர்தல் செலவிற்காக கொடுக்கப்பட்ட பணத்தை மோசடி செய்ததாக பாஜகவின் மூத்த நிர்வாகி எச்.ராஜா அவர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்த காரைக்குடி தொகுதியை சேர்ந்த பாஜக நிர்வாகிகள் மூவர் கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளதாக அண்மையில் தகவல் வெளியாகியது. இந்நிலையில் பாஜகவின் காரைக்குடி நகர தலைவர் சந்திரன் அவர்கள் மாவட்ட தலைமைக்கு கடந்த 21-ஆம் தேதி விலகல் கடிதம் அனுப்பியிருந்தார்.

அதில் எச்.ராஜா தான் செய்த தவறுகளை மறைத்து தங்கள் மீது குற்றம் சாட்டுவதாக கூறியிருந்தார். இந்நிலையில் தற்போதும் இது குறித்து தெரிவித்துள்ள நீக்கப்பட்ட காரைக்குடி நகர பாஜக தலைவர் சந்திரன் அவர்கள், எச்.ராஜா 40 ஏக்கர் நிலத்தில், 4 கோடியில் பண்ணை வீடு காட்டுவதாகவும், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டால் கூட எச்.ராஜாவால் வெற்றி பெற முடியாது எனவும், எச்.ராஜா போன்றவர்கள் கட்சியில் இருக்கும் வரை தமிழகத்தில் தாமரை மலராது எனவும் தெரிவித்துள்ளார்.