எச்.ராஜா போன்றவர்கள் கட்சியில் இருக்கும் வரை தமிழகத்தில் தாமரை மலராது என கட்சியிலிருந்து நீக்கப்பட்ட காரைக்குடி நகர பாஜக தலைவர் சந்திரன் அவர்கள் கூறியுள்ளார். தேர்தல் செலவிற்காக கொடுக்கப்பட்ட பணத்தை மோசடி செய்ததாக பாஜகவின் மூத்த நிர்வாகி எச்.ராஜா அவர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்த காரைக்குடி தொகுதியை சேர்ந்த பாஜக நிர்வாகிகள் மூவர் கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளதாக அண்மையில் தகவல் வெளியாகியது. இந்நிலையில் பாஜகவின் காரைக்குடி நகர தலைவர் சந்திரன் அவர்கள் மாவட்ட தலைமைக்கு கடந்த 21-ஆம் […]