#Breaking:பிரதமருடன் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்திப்பு....!

The Governor of Tamil Nadu Banwarilal Purohit met the Prime Minister

இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்,குடியரசு தலைவர் மற்றும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை இன்று காலை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில்,பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் ஆளுநர் சந்தித்து உள்ளார். தமிழகத்தின் ஆளுநர் மாற்றப்படலாம் என தகவல் வெளியாகி வரும் நிலையில், இந்த சந்திப்பு மிக முக்கியத்தும் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

மேலும் இந்த சந்திப்பில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை, நீட் தேர்விலிருந்து விலக்கு உள்ளிட்ட விவகாரங்கள் மற்றும் தமிழக அரசியல் நிலவரம், கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்தும்  ஆலோசிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த பிறகு முதன் முறையாக ஆளுநர் டெல்லி சென்றுள்ளார். பன்வாரிலால் புரோகித் கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் தமிழக ஆளுநராக பதவி வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.