பொதுப்பணித்துறையில் டெண்டர் ஒப்புதல்;அதிகார வரம்பு உயர்த்தி உத்தரவு – தமிழக அரசு அரசாணை!

The government of Tamil Nadu has increased the powers of the authorities to approve tenders in the public sector.

சென்னை:பொதுப்பணித்துறையில் டெண்டர் ஒப்புதல் வழங்க அதிகாரிகளுக்கு அதிகார வரம்பு உயர்த்தி தமிழக அரசு அரசாணை.

தமிழக சட்டமன்றத்தில் கடந்த  27.08.2021 அன்று நடந்த பொதுப்பணித் துறை மானியக்கோரிக்கை தொடர்பான விவாதத்தின்போது,தொழில்நுட்ப ஒப்புதல் மற்றும் ஒப்பந்தப்புள்ளி ஒப்புதலுக்கான தலைமைப் பொறியாளர், கண்காணிப்புப் பொறியாளர் மற்றும் செயற்பொறியாளர்களுக்கு அதிகார வரம்பு உயர்த்தப்படும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவித்தார்.

இந்நிலையில்,பொதுப்பணித்துறையில் தொழில்நுட்ப ஒப்புதல் மற்றும் ஒப்பந்தப்புள்ளி ஒப்புதல் வழங்க தலைமைப் பொறியாளர், கண்காணிப்புப் பொறியாளர் மற்றும் செயற்பொறியாளர்களுக்கு அதிகார வரம்பு உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

unknown node