சிறைவாசிகளின் வசதிக்கேற்ப தொலைபேசி பேசும் கால அளவை அதிகரித்துள்ளதோடு, வீடியோ கால் பேசும் வசதியையும் அறிமுகப்படுத்தி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. நிலுவையில் உள்ள மசோதாக்கள்..! முதல்வருக்கு அழைப்பு விடுத்த ஆளுநர் ஆர்.என்.ரவி..! அந்த அரசாணையில், சிறைவாசிகளின் மன அழுத்தத்தை குறைக்கவும் அவர்கள் தவறுகளை உணர்ந்து மேலும் குற்றங்களில் ஈடுபடுவதை தடுத்திடும் பொருட்டும், சிறைவாசிகள் தமது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், வழக்குரைஞர்கள் ஆகியோரிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள தற்போது வழங்கப்பட்டு வரும் தொலைபேசி வசதிக்கான (ஆடியோ) கால […]
தொடர் மழையால் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி, தரங்கபாடி குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் நிவாரண தொகை வழங்க அரசாணை வெளியாகியுள்ளது. தொடர் மழை காரணமாக தமிழகத்தில் அதிகம் பாதிப்புள்ளான மாவட்டம் என்றால் அது மயிலாடுதுறை மாவட்டம் தான். அதிலும், குறிப்பாக சீர்காழி, தரங்கம்பாடி பகுதிகளில் மக்கள் தங்கள் இயல்பு மிகவும் பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழக அரசு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1000 ரூபாய் நிவாரண தொகை அளிப்பதாக அறிவித்தது. அதன்படி, தற்போது அதற்கான அரசாணை வெளியாகியுள்ளது. […]
கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் கடந்த வருடம் 2021-22 ஆம் ஆண்டுக்கான மானிய கோரிக்கையின் போது மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் அமைக்கப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி தமிழக அரசு தற்போது கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசங்கள் மற்றும் பணியாளர்களுக்கு நல […]
தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் மாணவர் சேர்க்கையில் அகில இந்திய ஒதுக்கீட்டில் 69% இட ஒதுக்கீடு பின்பற்ற அரசாணை. அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோர்,இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இதுவரை அகில இந்திய ஒதுக்கீட்டில் இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. இந்நிலையில்,திருச்சியில் உள்ள தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் மாணவர் சேர்க்கையில் அகில இந்திய ஒதுக்கீட்டில் 69% இட ஒதுக்கீட்டை பின்பற்ற தமிழக அரசால் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி,நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையில் அகில இந்திய ஒதுக்கீட்டில் 69% இட ஒதுக்கீடு […]
கடலூர்:வடலூரில் தோட்டக்கலைப் பூங்கா அமைக்க ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு. கடலூர் மாவட்டம் வடலூரில் தோட்டக்கலைத் துறை மூலம் தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமையின் பண்ணை வரவின நிதியிலிருந்து ரூ.1 கோடி மதிப்பீட்டில் பூங்கா அமைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக,அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: “மாண்புமிகு வேளாண்மை-உழவர் நலத் துறை அமைச்சர் அவர்கள் 14.8.2021 அன்று சட்டப்பேரவையில் வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் பிறவற்றுடன் பின்வரும் அறிவிப்பினை மேற்கொண்டுள்ளார்கள் […]
புலிகளை பாதுகாக்கும் “PROJECT TIGER” திட்டத்தின்கீழ் சத்தியமங்கலம், புலிகள் காப்பகம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர்- மேகமலை புலிகள் காப்பகத்தில் புலிகளை பாதுகாக்க நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணைகள் வெளியிட்டுள்ளது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர்- மேகமலை புலிகள் காப்பகத்தில் “PROJECT TIGER”(புலிகள் திட்டம்) திட்டத்தின்கீழ் புலிகளை பாதுகாக்க நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணைகள் வெளியிட்டுள்ளது. அதன்படி,சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் “புலிகள் திட்டத்திற்கு” நிர்வாக அனுமதியின்படி ரூ.4.86 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு ஆணை […]
பள்ளி, கல்லூரி மற்றும் அரசு ஆவணங்களில் பெயர் எழுதும்போது முன் எழுத்தை தமிழில் எழுத தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பள்ளி, கல்லூரி மற்றும் அரசு ஆவணங்களில் தமிழில் பெயர் எழுதும்போது முன்னெழுத்தையும் தமிழிலேயே எழுத ஆணை பிறப்பித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: “2021-2022-ஆம் ஆண்டுக்கான தமிழ் வளர்ச்சித் துறையின் மானியக் கோரிக்கை 46-இன் போது தொழில் துறை அமைச்சர் அவர்களால் கீழ்க்கண்ட அறிவிப்பு அறிவிக்கப்பட்டது. தமிழில் பெயர் எழுதும் […]
அரசு மற்றும் டான்சிட்கோ புறம்போக்கு நிலங்களை,நில உரிமை மாற்றம் மற்றும் இரயத்துவாரி என மாற்றம் செய்து முடிவெடுக்க அதிகாரமளிக்கப்பட்ட குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசு மற்றும் தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனத் (டான்சிட்கோ) தொழிற்பேட்டைகளில் உள்ள அரசு புறம்போக்கு என வகைப்பாடு கொண்ட நிலங்களை நில உரிமை மாற்றம் மற்றும் இரயத்துவாரி என வகைபாடு மாற்றம் செய்து முடிவெடுத்திட அதிகாரமளிக்கப்பட்ட குழு (Empowered Committee) அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. […]
40 கல்லூரி விடுதிகளுக்கு போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்கள் வழங்க ரூ.10 லட்சம் செலவில் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு. முன்னதாக நடைபெற்ற 2021-2022 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின் போது “கல்லூரி விடுதிகளில் தங்கி பயின்று வரும் மாணவ, மாணவியர் வேலை வாய்ப்புக்கான போட்டி தேர்வுகளில் பங்கேற்பதை ஊக்கப்படுத்தும் பொருட்டு, விடுபட்டுள்ள 40 பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் கல்லூரி விடுதிகளுக்கு, போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்கள் 10 இலட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படும்” […]
காவலர் வீடுகளின் தரைஇடம் (Floor Space) உயர்த்தி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. தமிழக காவலர் வீடுகளின் தரைஇடம் (Floor Space) உயர்த்தி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.மேலும்,இது தொடர்பாக தமிழக காவல்துறை தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் கூறியுள்ளதாவது: “காவலர் வீடுகளின் தரைஇடம் (Floor Space) உயர்த்தி அரசு ஆணை பிறப்பித்துள்ளது.அதன்படி, காவலர்,தலைமைக் காவலர்களுக்கு 650 ச.அடி-யிலிருந்து 750 ச.அடியும் (15.38%), உதவி ஆய்வாளர்களுக்கு 724 ச.அடி-யிலிருந்து 850 ச.அடியும் (17.40%), ஆய்வாளர்களுக்கு 843 ச.அடி-யிலிருந்து […]
சென்னை:தமிழகம் முழுவதும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் 3 விடுதிகளுக்கு பரிசுகள் வழங்க நிர்வாக ஒப்புதல் அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர்,மிகப்பிற்படுத்தப்பட்டோர்,சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலன் 2021-2022 ஆம் ஆண்டிற்கான புதிய அறிவிப்புகள் படி, ஆண்டு தோறும் மாவட்ட அளவில் செயல்படும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் மற்றும் கள்ளர் சீரமைப்பு விடுதிகளில் சிறந்த மூன்று விடுதிகளை தேர்வு செய்து பரிசுகள் வழங்க நிர்வாக ஒப்புதல் அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக […]
மின்னணு ரீதியில் ஓட்டுநர் உரிமம், குடும்ப அட்டை உள்ளிட்டவைகளின் நகல்கலைப் பெறும் வசதியை செயல்படுத்தப்படுவதற்கான உத்தரவை பிறப்பித்து தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையானது – காகிதமற்ற நிர்வாகத்தை அடையவும்,அனைத்து அரசுத் துறைகளாலும் டிஜிலாக்கர் அமைப்பை ஏற்றுக்கொள்ளும் வகையில்,இனி மின்னணு ரீதியில் ஓட்டுநர் உரிமம், குடும்ப அட்டை உள்ளிட்டவற்றின் நகல்கலைப் பெறும் வசதியை செயல்படுத்தப்படுவதற்கான உத்தரவை பிறப்பித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது: […]
உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள 10,583 நபர்களுக்கு மிதிவண்டிகள் வழங்க அனுமதி மற்றும் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு. தமிழ்நாட்டில் உள்ள பள்ளிவாசல்கள், தர்காக்கள் மற்றும் மதரஸாக்களில் பணிபுரியும் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக உள்ள 10,583 நபர்களுக்கு மிதிவண்டிகள் வழங்குவதற்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக,பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது: கடந்த செப்டம்பர் […]
கிராமப்புறங்களில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்ட சில வகுப்புகளை சேர்ந்த மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் பொருட்டு அவர்களின் பெற்றோர்களது ஆண்டு வருமான உச்ச வரம்பினை 1 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர்,மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலனைச் சேர்ந்த 3 ஆம் வகுப்பு முதல் 6 ஆம் வகுப்பு வரை கிராமப்புறங்களில் கல்வி பயிலும் மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் பொருட்டு அவர்களின் பெற்றோர்களது ஆண்டு வருமான உச்ச […]
சென்னை:பொதுப்பணித்துறையில் டெண்டர் ஒப்புதல் வழங்க அதிகாரிகளுக்கு அதிகார வரம்பு உயர்த்தி தமிழக அரசு அரசாணை. தமிழக சட்டமன்றத்தில் கடந்த 27.08.2021 அன்று நடந்த பொதுப்பணித் துறை மானியக்கோரிக்கை தொடர்பான விவாதத்தின்போது,தொழில்நுட்ப ஒப்புதல் மற்றும் ஒப்பந்தப்புள்ளி ஒப்புதலுக்கான தலைமைப் பொறியாளர், கண்காணிப்புப் பொறியாளர் மற்றும் செயற்பொறியாளர்களுக்கு அதிகார வரம்பு உயர்த்தப்படும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவித்தார். இந்நிலையில்,பொதுப்பணித்துறையில் தொழில்நுட்ப ஒப்புதல் மற்றும் ஒப்பந்தப்புள்ளி ஒப்புதல் வழங்க தலைமைப் பொறியாளர், கண்காணிப்புப் பொறியாளர் மற்றும் செயற்பொறியாளர்களுக்கு அதிகார வரம்பு […]
தமிழகம்:புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் நகராட்சி, பேரூராட்சிகளை மறுவரையறை செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் புதிதாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி, நெல்லை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்கள் ஏற்கனவே பிரிக்கப்பட்ட நிலையில், அம்மாவட்டங்களுக்கான கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்,ஊராட்சி ஒன்றிய தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்று,அதில் திமுக அதிக இடங்களை கைப்பற்றியது. […]
தமிழக அரசின் நீர்வளத்துறை மற்றும் பொதுப்பணித்துறை ஆகியவற்றை இரண்டாக பிரித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் நீர்வளத்துறை மற்றும் பொதுப்பணித்துறை ஆகிய இரண்டும் தனித் துறைகளாக செயல்படுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.அதன்படி,நீர்வளத் துறை தொடர்பானவை நீர்வள அமைச்சருக்கும், பொதுப்பணித் துறை தொடர்பானவை பொதுப்பணித் துறை அமைச்சருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.மேலும்,இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது: “பொதுப்பணித் துறை மற்றும் நீர்வளத் துறைக்கு இடையே, துறையின் நிர்வாகப் பணிகள் பிரிக்கப்பட வேண்டும் என, […]
தமிழக அரசு 9 பேரூராட்சிகளை ,நகராட்சிகளாக மாற்றியதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 9 பேரூராட்சிகள், நகராட்சிகளாக மாற்றப்பட்டதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.அதன்படி, தென்காசி மாவட்டத்தில் – சுரண்டை , திருநெல்வேலி மாவட்டம் – களக்காடு, கள்ளக்குறிச்சி மாவட்டம் – திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை காஞ்சிபுரம் மாவட்டம் – குன்றத்தூர், மாங்காடு, விழுப்புரம் மாவட்டம் – கோட்டக்குப்பம், இராணிப்பேட்டை மாவட்டம் – சோளிங்கர் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நந்திவரம்-கூடுவாஞ்சேரி உட்பட 9 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. […]