தமிழகத்தில் 31ம் தேதி வரை நீடித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 19-7-2021 அன்று காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில் மாநிலத்தின் கொரோனா நோய்த் தொற்று நிலையைக் கண்காணித்து தொடர்ந்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் கீழ்க்கண்ட செயல்பாடுகளுக்கு 31-7-2021 காலை 6.00 மணி வரை தொடர்ந்து தடை விதிக்கப்படுகிறது.
மாநிலங்களுக்கிடையே தனியார் மற்றும் அரசு பேருந்து போக்குவரத்து (புதுச்சேரி நீங்கலாக)
மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களை தவிர சர்வதேச விமான போக்குவரத்து.
திரையரங்குகள்
அனைத்து மதுக்கூடங்கள்
நீச்சல் குளங்கள்
பொதுமக்கள் கலந்துகொள்ளும் சமுதாயம் அரசியல் சார்ந்த கூட்டங்கள்.
பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகள்
பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்
உயிரியல் பூங்காக்கள்
நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக திருமண நிகழ்வுகளில் 50 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
இறுதிச் சடங்குகளில் 20 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.