முதல்வர் வேட்பாளராக என்னை முன்மொழிந்த சரத்குமாருக்கு நன்றி – கமல்ஹாசன் ட்வீட்

Thanks to Sarathkumar for nominating me as the Chief Ministerial candidate, Kamal Haasan posted on his Twitter page.

என்னை முதல்வர் வேட்பாளராக முன்மொழிந்த சரத்குமாருக்கு நன்றி தெரிவித்து, கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்ற சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் பேசிய சரத்குமார், மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சி மற்றும் ஐ.ஜே.கே. கூட்டணி உறுதியானது என்றும் எங்கள் கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் கமல்ஹாசன் தான் என சரத்குமார் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், என்னை முதல்வர் வேட்பாளராக முன்மொழிந்த சரத்குமாருக்கு நன்றி தெரிவித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார். அதில், மக்கள் விரும்பும் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக என்னை முன்மொழிந்த சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர், அன்புச் சகோதரர் சரத்குமாருக்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

மேலும், மக்கள் நலனில் அக்கறை உள்ளவர்கள் எதிர்வரும் நாட்களில் எம்மோடு கைகோர்ப்பார்கள் என்றும் இம்முறை வெல்வது தமிழகமாக இருக்கட்டும் எனவும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

unknown node
முதல்வர் வேட்பாளராக என்னை முன்மொழிந்த சரத்குமாருக்கு நன்றி – கமல்ஹாசன் ட்வீட்