முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் கழகத்தின் மூத்த நிர்வாகிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி என கனிமொழி எம்.பி ட்வீட்.
திமுக துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவராக அக்கட்சியின் மகளிரணி செயலாளர் கனிமொழி தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து கனிமொழி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘திராவிடச் சித்தாந்தத்தின் வழி உதித்த பேரியக்கமான நம் திமு கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பளித்து, கழகப்பணியாற்ற வாய்ப்பளித்துள்ள கழகத் தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின்அவர்களுக்கும் கழகத்தின் மூத்த நிர்வாகிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.’ என பதிவிட்டுள்ளார்.
unknown node