தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி – முதல்வர் மு.க.ஸ்டாலின்

Chief Minister MK Stalin tweeted that he thanked the people of Tamil Nadu for giving him a great opportunity to serve Tamil Nadu.

தமிழ்நாட்டுக்குச் சேவை செய்திட மாபெரும் வாய்ப்பை வழங்கிய தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்.

இன்று காலை சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் புதிய முதல்வராக முதல் முறையாக திமுக தலைவர் முக ஸ்டாலின் பதவியேற்றார். இவருடன் சேர்ந்து 33 அமைச்சர்களும் பொறுப்பேற்றனர். இவர்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு உரிமையும் செய்து வைத்தார்.

இதையடுத்து, அண்ணா, கலைஞர் மற்றும் பெரியார் நினைவிடங்கள் சென்று மரியாதை செலுத்திய பின் தலைமை செயலகம் சென்ற முதலமைச்சர் முக ஸ்டாலின், முதற்கட்டமாக 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். முதல்வர் பதவி ஏற்றுள்ள முக ஸ்டாலினுக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

திமுக தொண்டர்கள் இனிப்புகள் வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், முதல்வர் முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ என்று கூறி இன்று தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டேன்.

காவிரிக் கரையாம் தஞ்சை மண்ணின் – திருவாரூரைச் சார்ந்த எனக்கு தாய்த் தமிழ்நாட்டுக்குச் சேவை செய்திட மாபெரும் வாய்ப்பை வழங்கிய தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி என்றும் குறிப்பிட்டுளார்.

unknown node