ஆருயிர் தலைவர் மொழிகேட்டு நடப்பேன் என அமஸிஹா சேகர் பாபு ட்விட்.
தமிழக அமைச்சரவையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் 10 அமைச்சர்களின் இலகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் முத்துசாமியிடம் இருந்த சிஎம்டிஏ துறை (சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம்) தற்போது அமைச்சர் சேகர் பாபுவுக்கு கூடுதலாக கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அமைச்சர் சேகர் பாபு தனது ட்விட்டர் பக்கத்தில், ‘என் உயிரினும் மேலான அன்பு தலைவரே! என் ஆருயிர் தலைவர் மொழிகேட்டு நடப்பேன்! என் ஆயுள் உள்ளவரை அவர் பணிசெய்து கிடப்பேன்! நன்றி என்பது வெறும் வார்த்தை! உங்கள் வழி நடப்பது என் வாழ்க்கை!’ என பதிவிட்டுள்ளார்.
unknown node