DMK-ADMK : வடசென்னை மக்களவை தொகுதியில் யார் முதலில் வேட்புமனு தாக்கல் செய்வது என்பது தொடர்பாக திமுக அதிமுகவினர் இடையே வாக்குவாதம். தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் 2 நாட்களே (மார்ச் 28 கடைசி நாள்) உள்ள நிலையில், இன்று பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை அந்தந்தந்த தொகுதி தேர்தல் அலுவலர்களிடம் சமர்ப்பித்து வருகின்றனர். வடசென்னை மக்களவை தொகுதிக்கான திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி, அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ ஆகியோரும் […]
சென்னை புறநகர் பகுதியில் புதியதாக திறக்கப்பட்டுள்ள கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் இன்று புதிய காவல் நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் சேகர் பாபு கலந்து கொண்டிருந்தார். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அடுத்தடுத்து செயல்படுத்தப்பட உள்ள புதிய திட்டங்கள் குறித்து அமைச்சர் செய்தியாளர்களிடம் பல்வேறு தகவல்களை கூறினார். அவர் கூறுகையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் புதியதாக மலிவு விலையில் தரமான உணவகங்கள் அமைக்க அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். […]
இந்து அறநிலையத்துறை செயல்பாடுகளுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் அவதூறு பரப்படுவதாக அத்துறை அமைச்சர் சேகர் பாபு குற்றசாட்டியுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், அறநிலையத்துறை தொடர்பாக வாட்ஸ் அப் மூலம் பரப்பப்படும் அவதூறுகளுக்கு திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தார். இதுவரை இல்லாத வகையில் 30 மாதங்களில் இந்து அறநிலையத்துறை பல்வேறு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கோயபல்ஸ் தத்துவம் போல் ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொல்லி உண்மையாக்க முயற்சிக்கிறார்கள். திருக்கோயில் சொத்துக்கள் தவறான வழியில் சென்றுவிட கூடாது […]
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அமைச்சர் சேகர் பாபு ஆய்வு மேற்கொண்டார். சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் துறை ஒதுக்கப்பட்ட அடுத்த நாளே கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அமைச்சர் சேகர் பாபு ஆய்வு மேற்கொண்டார். அதன்பின் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப பல பேருந்து நிலையங்கள் இருந்தால்தான் நெரிசல் குறையும். பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எவ்வளவு விரிவாக மக்கள் பயன்பாட்டுக்கு அளிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக […]
ஆருயிர் தலைவர் மொழிகேட்டு நடப்பேன் என அமஸிஹா சேகர் பாபு ட்விட். தமிழக அமைச்சரவையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் 10 அமைச்சர்களின் இலகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் முத்துசாமியிடம் இருந்த சிஎம்டிஏ துறை (சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம்) தற்போது அமைச்சர் சேகர் பாபுவுக்கு கூடுதலாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அமைச்சர் சேகர் பாபு தனது ட்விட்டர் பக்கத்தில், ‘என் உயிரினும் மேலான அன்பு தலைவரே! என் ஆருயிர் தலைவர் மொழிகேட்டு நடப்பேன்! என் ஆயுள் உள்ளவரை […]
மத்திய அரசு அளவில் திமுகவின் திராவிட மாடல் ஆட்சி கொடிகட்டி பறக்கிறது. – அமைச்சர் சேகர் பாபு கருத்து. தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவந்தராஜன் தமிழகத்தில் ஆளும் திமுக ஆட்சி மற்றும் , திமுக கூறும் திராவிட மாடல் ஆட்சி ஆகியவற்றை விமர்சித்து கருத்து கூறிவந்தார். இந்த கருத்துக்கு எதிராக, தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், மத்திய அரசு அளவில் திமுகவின் திராவிட மாடல் ஆட்சி கொடிகட்டி பறக்கிறது. இதனால் தமிழிசை […]
முதலமைச்சர் கன்வாய் வாகனத்தில் தொங்கிய படி சென்றது அதிகார துஷ்பிரயோகம் அல்ல. அது பிரியாவின் துணிச்சலாக பார்க்க வேண்டும் அனா அமைச்சர் சேகர் பாபு விளக்கம் மழை பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக மேயர் பிரியா முதலமைச்சர் கன்வாய் வாகனத்தில் தொங்கிய படி சென்றது தொடர்பாக வீடியோக்கள் இணையத்தில் வைரலான நிலையில், இதுகுறித்து பலரும் விமர்சித்து வருகின்றனர். இது தொடர்பாக விளக்கமளித்த அமைச்சர் சேகர் பாபு, மழை பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக மேயர் பிரியா முதலமைச்சர் கன்வாய் வாகனத்தில் […]
தமிழக அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. – அமைச்சர் சேகர் பாபு தகவல். வங்கக்கடலில் உருவாகியிருந்த மாண்டஸ் புயல் இன்று அதிகாலை கரையை கரையை கடந்தது. மாமல்லபுரத்தில் கரையை கடக்கையில் புயல் காற்று வீசியதன் காரணமாக பல்வேறு மரங்கள் விழுந்தன. புயல் காரணமாக சென்னை சுற்றுவட்டாரப்பகுதிகளில் காற்றின் வேகத்திற்கு தாக்கு பிடிக்க முடியாமல் 400க்கும் மேற்பட்ட மரங்கள் பல பகுதிகளில் முறிந்து விழுந்துள்ளன. மேலும், பல இடங்கள் புயலால் சேதமடைந்துள்ளது. இந்த […]
அன்னை தமிழில் அர்ச்சனை திட்டத்தை முதன் முதலில் அறிமுகப்படுத்திய கபாலீஸ்வரர் கோயில் இணை ஆணையர் காவேரி மறைவு அறநிலையத்துறைக்கு பேரிழப்பு என அமைச்சர் சேகர் பாபு அறிக்கை. சென்னை மயிலாப்பூர், கபாலீஸ்வரர் திருக்கோவில் இணை ஆணையர் திருமதி காவேரி அவர்கள், அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படிருந்த நிலையில் இன்று காலை காலமானார். இவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் அன்னை தமிழில் அர்ச்சனை திட்டத்தை […]
தமிழ்நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே RSS அமைப்பின் நோக்கம் என அமைச்சர் சேகர்பாபு பேட்டி. அமைச்சர் சேகர்பாபு சென்னையில் பட்டாளம் பகுதியில் உள்ள குக்ஸ் சாலையில் மழை நீரை வெளியேற்றும் பணிகளை ஆய்வு செய்தார். அதன் பின் மழைக்கால காய்ச்சல் தடுப்பு மற்றும் சிகிச்சை முகாமை தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், சென்னையில் 98 சதவீதம் இயல்பு நிலை திரும்பி விட்டது. மீண்டும் மழை பெய்தாலும் அதனை […]
எப்போதும் மழை நீர் தேங்கும் வால் டாக்ஸ் சாலையில் இன்று மழைநீர் தேங்கவில்லை என அமைச்சர் சேகர் பாபு பேட்டி. தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், மழையினால் பாதிப்புகளை சரிசெய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது அவரிடம், வாய் புளித்ததை மாங்காய் புளித்தது என சொல்லக்கூடாது.எப்போதும் மழை நீர் தேங்கும் வால் டாக்ஸ் சாலையில் இன்று மழைநீர் தேங்கவில்லை. சென்னையில் போர்க்கால அடிப்படையில் ராணுவத்தை போல் மாநகராட்சி பணியாளர்கள் பணி […]
கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோவிலில் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது பற்றி அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளனர். தீபாவளி பண்டிகை முடிந்ததும் அடுத்ததாக இந்து கடவுள் முருகனுக்கு உகந்த திருவிழாவான கந்தசஷ்டி திருவிழா அக்டோபர் 30ஆம் தேதி நடைபெற உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா கோலாகலமாக நடைபெறும். இதற்காக சிறப்பு பூஜைகளுடன் வரும் 25ஆம் தேதி முதல் தொடங்கும். திருச்செந்தூர் கந்தசஷ்டி […]
சென்னை தீவுத்திடலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள பட்டாசு கடைகளை திறந்து வைத்த அமைச்சர் சேகர்பாபு. அமைச்சர் சேகர் பாபு சென்னை தீவுத்திடலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள பட்டாசு கடைகளை திறந்து வைத்தார். இந்த நிலையில், 47-க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் அமைக்கப்பட்ட நிலையில் இன்று முதல் 25ம் தேதி வரை விற்பனை நடைபெறும் என்றும், 21-ம் தேதி வரை பட்டாசுகளுக்கு 25% தள்ளுபடி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டிற்கு முன் 300 கோவில்களில் குடமுழுக்கு விழா நடத்தப்பட்டுள்ளது. இது அறநிலைய துறை வரலாற்றில் முதல் முறையாகும் என அமைச்சர் சேகர் பாபு பெருமிதம். தமிழக அறநிலைத்துறை தற்போது புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளது. இதனை தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். அதாவது, இதுவரை கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி வரையில் ஓராண்டில் அதிகமாக கோவில்களில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) நடத்தியது இதுவே முதல் முறை. மொத்தமாக கடந்த ஏப்ரல் […]
விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிப்பது தவறில்லை; இந்து சமய அறநிலையத்துறையின் வேலையே அது தான் என அமைச்சர் சேகர் பாபு பேட்டி. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில், அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிப்பது தவறில்லை; இந்து சமய அறநிலையத்துறையின் வேலையே அது தான் எனத் தெரிவித்துள்ளார். மேலும், வள்ளலார் முப்பெரும் விழா நடத்துவது குறித்து 14 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது; […]
கிரிக்கெட்டின் தல எம்.எஸ்.தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து அமைச்சர் சேகர்பாபு ட்வீட். கிரிக்கெட்டின் தல எம்.எஸ்.தோணி அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்திருந்தார்.இந்த நிலையில், அமைச்சர் சேகர் பாபு அவர்களும் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘கிரிக்கெட்டின் தல எம்.எஸ்.தோணிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!! சென்னையில் ஹெலிகாப்டர் பறப்பதைப் பார்க்க காத்திருக்கிறோம்’ என பதிவிட்டுள்ளார். கிரிக்கெட்டின் தல @msdhoni க்கு பிறந்தநாள் […]
10 கோயில்களில் இலவச பிரசாதம் வழங்கும் திட்டத்தை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். வடபழனி, திருச்செந்தூர் முருகன் கோயில் உட்பட 10 முக்கிய கோயில்களில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் பொங்கல், புளியோதரை, லட்டு உள்ளிட்ட இலவச பிரசாதம் வழங்கும் திட்டத்தை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். அதன்படி திருச்செந்தூர், வடபழனி, திருச்செந்தூர் முருகன் கோயில், திருவேற்காடு, ஸ்ரீரங்கம், சமயபுரம், மருதமலை, திருத்தணி கோயில்களில் இலவச பிரசாதம் வழங்கப்படுகிறது.
உண்மையாக இயக்கத்திற்காக எதிர்பார்ப்பு நினைப்பவர்களை உயர்த்தி தூக்கி பிடிப்பவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் என சேகர்பாபு பேட்டி. சென்னையில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழக முதல்வர் கிறிஸ்மஸ் பெருவிழாவில் கலந்து கொண்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி இருக்கிறார். முதல்வர் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் இதேபோன்று மக்களுக்கு […]
வடபழனி முருகன் கோவிலில் ஜனவரி 23ம் தேதி குடமுழுக்கு நடைபெறும் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, வடபழனி முருகன் கோவில் குடமுழுக்கு வரும் ஜனவரி 23-ஆம் தேதி நடைபெறும். பொதுமக்கள் அனுமதிப்பது குறித்து குடமுழுக்கு நடைபெறும் சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்படும் என தெரிவித்தார். வடபழனி முருகன் கோவிலில் கடந்த 2007ம் ஆண்டுக்கு பிறகு ஜன.23ம் தேதி குடமுழுக்கு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பதி கோயிலுக்கு நிகராக திருச்செந்தூர் கோயிலில் பக்தர்களின் வசதிகளை மேம்படுத்தும் திட்டம் சென்னை வடபழனி ஆதிமூல பெருமாள் கோயிலில் 8 லட்சம் ரூபாய் செலவில் பூஜை பொருட்கள் மற்றும் மலர் மாலைகள் விற்பனை செய்வதற்கான தற்காலிக அங்காடியை இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபு இன்று திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நவம்பர் மாத இறுதிக்குள் வடபழனி முருகன் கோயிலுக்கு குடமுழுக்கு நடத்தப்படும். வடபழனி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக […]