தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள நைனா படபோரா பகுதியில் இன்று நடைபெற்ற என்கவுன்டரில் தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டார். தெற்கு காஷ்மீரில் உள்ள நைனா பட்போரா பகுதியில் தீவிரவாதிகள் இருப்பதாக கிடைத்த தகவல் பேரில், பாதுகாப்புப் படையினர் அங்கு சுற்றிவளைத்துத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது, பாதுகாப்புப் படையினர் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதற்கு பாதுகாப்புப் படையினரும் பதிலுக்கு துப்பாக்கிச்சூடு நடத்தியபோது அடையாளம் தெரியாத ஒரு தீவிரவாதி சுட்டு கொல்லப்பட்டார்.
unknown node