அல்உமர்-முஜாஹிதீன் அமைப்பின் நிறுவனரும் தலைமைத் தளபதியுமான முஷ்டாக் அகமது சர்காரை பயங்கரவாதியாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. முஷ்டாக் சர்கார்,அல்கொய்தா மற்றும் ஜெய்ஷ்-முகமது போன்ற தீவிர பயங்கரவாத குழுக்களின் தொடர்புகள் மற்றும் இந்தியாவுக்கு மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் அமைதிக்கு அச்சுறுத்தலாக உள்ளார் என்று கூறி சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், 1967ன் கீழ் இந்த அறிவிப்பை உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கூற்றுப்படி, அவர் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்தை வளர்க்க பாகிஸ்தானில் இருந்து இடைவிடாத பிரச்சாரத்தை […]
தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள நைனா படபோரா பகுதியில் இன்று நடைபெற்ற என்கவுன்டரில் தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டார். தெற்கு காஷ்மீரில் உள்ள நைனா பட்போரா பகுதியில் தீவிரவாதிகள் இருப்பதாக கிடைத்த தகவல் பேரில், பாதுகாப்புப் படையினர் அங்கு சுற்றிவளைத்துத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, பாதுகாப்புப் படையினர் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதற்கு பாதுகாப்புப் படையினரும் பதிலுக்கு துப்பாக்கிச்சூடு நடத்தியபோது அடையாளம் தெரியாத ஒரு தீவிரவாதி சுட்டு கொல்லப்பட்டார். #PulwamaEncounterUpdate: 01 #terrorist killed. #Operation going on. Further details shall follow. […]
ஜம்மு காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் பயங்கரவாதி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், மற்றொருவர் பிடிபட்டுள்ளார். ஜம்மு காஷ்மீரில் உரி பகுதிக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தான் பயங்கரவாதி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த பொழுது, இந்த பயங்கரவாதி கடந்த சில தினங்களாகவே இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயற்சித்து வந்ததாகவும், தற்போது அவர் பிடிபட்ட நிலையில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த பகுதிக்குள் நுழைய முயன்ற மேலும் ஒரு […]
பூஞ்ச் மாவட்டத்தில் மேலும் ஒரு பயங்கரவாதி சுட்டுகொன்றதாக பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். ஜம்மு -காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோடு வழியாக இன்று அதிகாலை ஊடுருவ முயற்சி செய்த பயங்கரவாதியை ராணுவப் படையினர் கொன்றதாக பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் தேவேந்தர் ஆனந்த் தெரிவித்தார். இந்நிலையில் பாதுகாப்பு படையினரால் நடக்கப்பட்ட துப்பாக்கி சூட்டில் மேலும் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டு அவரது உடலும் மீட்கப்பட்டுள்ளது. இதனால் இருவரிடமிருந்தும் 2 ஏகே 47 ரக […]
பூஞ்ச் மாவட்டத்தில் பயங்கரவாதி ஒருவரை சுட்டுகொன்றதாக பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். ஜம்மு -காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோடு வழியாக இன்று அதிகாலை ஊடுருவ முயற்சி செய்த பயங்கரவாதியை ராணுவப் படையினர் கொன்றதாக பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் தேவேந்தர் ஆனந்த் தெரிவித்தார். அவரிடமிருந்து ஏகே 47 துப்பாக்கி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.