ஸ்ரீநகர் அருகே போலீஸ் பஸ் மீது பயங்கர தீவிரவாத தாக்குதலுக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கண்டனம்.
ஸ்ரீநகரின் பாந்தாசாவு பகுதியில் போலீஸ் ரோந்து வாகனம் மீது மறைந்திருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் 14 காவலர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஒரு உதவி ஆய்வாளர் மற்றும் தலைமைக் காவலர் என இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டரில் ஸ்ரீநகர் அருகே போலீஸ் பஸ் மீது பயங்கர தீவிரவாத தாக்குதல் நடந்ததை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். இந்த கொடூரமான தாக்குதலை நான் கண்டிப்பதோடு, வீரமரணம் அடைந்த பாதுகாப்புப் படை வீரர்களின் குடும்பங்களுக்கு எனது இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
காயமடைந்த மற்ற வீரர்கள் விரைவில் குணமடைய விழைகிறேன் என பதிவிட்டுள்ளார்.
unknown node