மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர், பள்ளி நிர்வாகம் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – திமுக எம்பி கனிமொழி!

DMK MP Kanimozhi has demanded that action be taken against the teacher who sexually harassed students at the BSPB school in Chennai and the school administration for not taking action.

சென்னையில் உள்ள பிஎஸ்பிபி பள்ளியில் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மீதும், நடவடிக்கை எடுக்காத பள்ளி நிர்வாகம் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக எம்பி கனிமொழி அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

சென்னையில் உள்ள பி.எஸ்.பி.பி பள்ளியில் ஆசிரியர் ஒருவர் பள்ளி மாணவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக திமுக எம்பி கனிமொழி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சென்னை பி.எஸ்.பி.பி பள்ளியில் உள்ள வணிகவியல் ஆசிரியர் மாணவர்களை பாலியல் துன்புறுத்தல் செய்வதாக எழுந்துள்ள புகார் என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது என பதிவிட்டுள்ளார்.

மேலும், சம்பந்தப்பட்டவர்களை விசாரித்து குற்றம் செய்தவர்கள் மீதும் அதை கண்டுகொள்ளாத பள்ளி நிர்வாகத்தின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொண்டு செல்வேன் என்று உறுதி அளிப்பதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் திமுக எம்.பி கனிமொழி அவர்கள் பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,

unknown node