ஜம்மு காஷ்மீரில் தமிழக வீரர் மரணத்திற்கு சசிகலா இரங்கல்.
ஜம்மு காஷ்மீர், ரஜோரி அருகே 25 கி.மீ தொலைவில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்ட நிலையில், 3 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதலில் ஏராளமான ராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், தமிழகத்தை சேர்ந்த லட்சுமணன் என்ற ராணுவ வீரர் உயிரிழந்துள்ளார். இவர் மதுரை மாவட்டம் T.புதுப்பட்டியை சேர்ந்தவர்.
இவரது மறைவுக்கு வி.கே.சசிகலா அவர்கள் இரங்கல் தெரிவித்து ட்விட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘ஜம்மு காஷ்மீரில் ரஜோரி அருகே ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் தமிழக வீரர் லட்சுமணன் உள்ளிட்ட மூன்று இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்திருப்பதாக வரும் செய்தி மிகவும் அதிர்ச்சியையும், துயரத்தையும் அளிக்கிறது.
மேலும், இந்த பயங்கரவாத தாக்குதலில் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் ராணுவ வீரர்கள் விரைவில் குணமடைய ஆண்டவனை வேண்டுகிறேன். வீர மரணம் அடைந்த திரு.லட்சுமணன் உள்ளிட்ட மூன்று ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். வீர மரணமடைந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.
unknown node