Udhayanidhi Stalin : சசிகலா காலில் சில்லறை தேடிய எடப்பாடி பழனிச்சாமி என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம். வடசென்னை மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று வடசென்னை பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். அப்போது முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குறித்தும், பிரதமர் மோடி குறித்தும் கடும் விமர்சனங்களை முன்வைத்தார். அவர் பேசுகையில், நமது முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை மக்கள் கடந்த தேர்தலில் ஒரு மனதாக […]
EPS : நான் ஏன் சசிகலா காலில் விழுந்து வணங்கினேன் என எடப்பாடி பழனிச்சாமி மதுரையில் விளக்கம் அளித்துள்ளார். மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் உதயநிதி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவருமே ஒருவருக்கொருவர் வார்த்தை போரிலும், புகைப்படங்கள் காட்டியும் விமர்சனம் செய்து வருகின்றனர். “செங்கலை காட்டத்தப்பா. போர் அடிக்குது” என இபிஎஸும், “நான் கல்ல காட்டுறேன், எடப்பாடி பழனிச்சாமி பிரதமரிடம் பல்ல காட்டுறாரு” என உதயநிதியும் மாறி மாறி விமர்சனம் செய்து வந்தனர். […]
பேரறிஞர் அண்ணாவின் 55-வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. அண்ணாவின் நினைவு நாளையொட்டி அவரது உருவ படத்திற்கு, நினைவு இடத்திற்கும் சென்று அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்தவகையில், திமுக சார்பி அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் அமைதி பேரணி இன்று காலை நடைபெற்றது. இந்த பேரணியில் அமைச்சர்கள், தி.மு.க. எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், தொண்டர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். சேப்பாக்கத்தில் இருந்து அண்ணா சதுக்கம் நோக்கி சென்ற திமுக பேரணி, சென்னை மெரினாவில் […]
தமிழக முன்னாள் முதல்வரும், திமுக நிறுவனத் தலைவருமான பேரறிஞர் அண்ணாவின் 55-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து, மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செய்தனர். பேரறிஞர் அண்ணாவின் 55-வது நினைவு தினத்தையொட்டி சென்னையில் திமுகவினர் அக்கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் தலைமையில் அமைதிப் பேரணி மேற்கொள்ளப்பட்டது. பிப்.8 திமுக எம்பிக்கள் கருப்பு சட்டை ஆர்ப்பாட்டம்! இதற்கிடையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி […]
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு 7 ஆண்டுகள் கழித்து முதல்முறையாக சசிகலா, நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகில் உள்ள கொடநாடு எஸ்டேட்டுக்கு நேற்று மாலை வந்தடைந்தார். கொடநாடு பங்களாவில் ஜெயலலிதா பெயரில் தியான மடம் மற்றும் சிலை அமைக்கப்பட உள்ள நிலையில், அதற்கான பூமி பூஜையில் கலந்து கொள்வதற்காக, சசிகலா அங்கு சென்றுள்ளதாக கூறப்பட்டது. அதன்படி, கொடநாடு எஸ்டேட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவச்சிலை அமைப்பதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. இதில் சசிகலா, எஸ்டேட் […]
கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை தொடர்ந்து பல்வேறு கோணங்களில் நடைபெற்று வரும் நிலையில், 7 ஆண்டுகளுக்குப் பிறகு சசிகலா, நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டுக்கு இன்று புறப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் காலமானார். இவரது மறைவிற்கு பிறகு ஓ.பன்னீர் செல்வம் முதலமைச்சராக பொறுப்பேற்ற நிலையில், அடுத்த சில நாட்களிலேயே அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். பின்னர், சொத்துக்குவிப்பு […]
கடந்த 2 நாட்களாக மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழை சென்னையையே புரட்டி போட்டுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். சென்னையின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் பெரும்பாலான மக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். அரசு சார்பில் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் அனைத்து வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை […]
அதிமுகவில் இருந்து விகே சசிகலாவை நீக்கியது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, அதிமுகவில் இடைக்கால பொதுச்செயலாளராக சசிகலாவும், துணை பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரனும் பொதுக்குழு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதையடுத்து, விகே சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை பதவிகளில் இருந்து நீக்கம் செய்து, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன. இதன்பிறகு, அதிமுகவில் ஒன்றை தலைமை பிரச்சனை பூகம்பமாக வெடித்து ஓபிஎஸ், இபிஎஸ் என இரு அணிகளாக […]
திமுகவின் பி டீம் ஆக பண்ருட்டியார் செயல்படுகிறார் என ஜெயக்குமார் விமர்சனம். சுனாமி நினைவு தினத்தை ஒட்டி அஞ்சலி செலுத்திய பின்னர், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், திமுகவின் பி டீம் ஆக பண்ருட்டியார் செயல்படுகிறார் வளர்ந்த கட்சியைப் பற்றியே விமர்சனம் செய்வதா? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அதிமுகவை இணைக்க பேச்சு நடப்பதாக சசிகலா கூறுவது ஜமுக்காளத்தில் வடிகட்டின பொய். பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்தவர் […]
அதிமுகவுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை என யாராலும் சொல்ல முடியாது என எம்ஜிஆர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு சசிகலா பேட்டியளித்தார். மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 35வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதன் காரணமாக பலரும் தங்கள் இரங்கலை எம்ஜிஆர் நினைவிடத்தில் செலுத்தி வருகின்றனர். எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் வி.கே.சசிகலா தனது ஆதரவாளர்களுடன் அஞ்சலி செலுத்தினார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுகவுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை என யாராலும் சொல்ல முடியாது என குறிப்பிட்டார். மேலும் அவர் […]
அணியாக வந்தாலும், தனியாக வந்தாலும் அதிமுக கூட்டணியில் சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரனை இணைக்க மாட்டோம் என ஜெயக்குமார் பேட்டி. சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக சிறப்பாக செயல்படுகிறது. எந்த நிலைமையிலும் அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும். கூட்டணியில் இடம்பெறுபவர்களுக்கு அதிமுக தான் இடம் ஒதுக்கும். அணியாக வந்தாலும், […]
ஜெயலலிதா வெளிநாட்டிற்கு சென்று சிகிச்சை மேற்கொள்ள மறுத்துவிட்டதாக சசிகலா பேட்டி. சென்னை, கீழ்ப்பாக்கத்தில் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட பின் சசிகலா செய்தி அவர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. வெளிநாட்டு மருத்துவர்கள் அவருக்கு வந்து சிகிச்சை அளித்த நிலையில், ஜெயலலிதா வெளிநாட்டிற்கு சென்று சிகிச்சை மேற்கொள்ள மறுத்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், இதுகுறித்து ஜெயலலிதா சென்னையே மருத்துவ தலைநகரம் தான், அதனால் வெளிநாடு […]
விலையில்லா வேட்டி, சேவை மற்றும் கரும்பு ஆகியவற்றையும் பொங்கலுக்கு கண்டிப்பாக ரொக்கத்துடன் சேர்த்து வழங்கிட வேண்டும் என சசிகலா வேண்டுகோள். திமுக தலைமையிலான அரசு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் விலையில்லா வேட்டி,சேலை மற்றும் கரும்பு ஆகியவற்றையும் சேர்த்து வழங்கிட வேண்டும் என வி.கே.சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘திமுக தலைமையிலான அரசு கடந்த ஆண்டு கொடுத்த தரமற்ற பொங்கல் பரிசு கொருப்பினை யாரும் மறந்து இருக்கமாட்டார்கள். எனவே, தமிழக அரசுக்கு தரமான மளிகை […]
ஆவின் நெய் விலை உயர்வுக்கு வி.கே.சசிகலா கண்டனம். பால் விலையை தொடர்ந்து, ஆவின் நெய் விலை கிலோவுக்கு ரூ.50 அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், திமுக நிலைமையிலான அரசு ஆவின் நெய் விலையை வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தி இருப்பது கடும் கண்டத்திற்குரியது. ஒரு லிட்டர் ஆவின் நெய் ரூபாய் 580, லிருந்து 630 ஆக உயத்த்தியிருப்பது யாரும் ஏற்றுக்கொள்ளமுடியாந்து. இது சாமானிய மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் ஏற்கனவே […]
திமுகவினர் இன்றைக்கு அரங்கேற்றியது மந்திரிசபை மாற்றமா? அல்லது முடிசூட்டும் விழாவா? என சசிகலா அறிக்கை. உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்றது குறித்து விமர்சித்து, வி.கே.சசிகலா திமுகவினர் இன்றைக்கு அரங்கேற்றியது மந்திரிசபை மாற்றமா? அல்லது முடிசூட்டும் விழாவா? என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில், அதிமுக எளிய தொண்டரையும் பதவி கொடுத்து அங்கீகரிக்கும் கட்சி; நானும் இதைப் பின்பற்றித்தான் இதுநாள் வரை வந்து இருக்கிறேன்; எனவே நாங்கள்தான் உண்மையான திராவிட இயக்கத்தை சேர்ந்தவர்கள். அ.தி.மு.க மிக பெரிய […]
சசிகலா தனது ஆதரவாளர்களுடன் வந்து ஜெயலலிதா நினைவிடத்தில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி, உறுதிமொழி ஏற்றார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, அவரது நினைவிடத்தில், ஈபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் அஞ்சலி செலுத்தி உறுதிமொழி ஏற்றனர். இதனை தொடர்ந்து, சசிகலா தனது ஆதரவாளர்களுடன் பேரணியாக வந்து ஜெயலலிதா நினைவிடத்தில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி, உறுதிமொழி ஏற்றார்.
சசிகலா தனது ஆதரவாளர்களுடன் பேரணியாக ஜெயலலிதா நினைவிடம் நோக்கி அஞ்சலி செலுத்துவதற்கு வந்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இன்று காலை முதலே சென்னை, மெரினாவில் அமைந்துள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுகவினர் பலர் வந்து தங்கள் அஞ்சலியை செலுத்திவிட்டு செல்கின்றனர். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களுடன் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். அதன் பிறகு ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் பேரணியாக வந்து ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி […]
மாங்காடு நகராட்சியில் மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து லட்சுமிபதி என்பவர் உயிரிழந்த சம்பவம் வேதனையளிக்கிறது. – சசிகலா கருத்து. சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக மழைநீர் ஆங்காகே தேங்கி வருகிறது. இந்த மழைநீரை வெளியேற்ற மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் அங்கங்கே மழைநீர் வடிகாலுக்காக பள்ளம் தோண்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், மாங்காடு பாலண்டிஸ்வர் தெருவை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான 42வயதான லட்சுமிபதி என்பவர் இன்று அதிகாலை தனது வீட்டிலிருந்து […]
அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் துரை கோவிந்தராஜன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து சசிகலா ட்வீட். அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் அரசு கொறடா, மாநில விவசாயப் பிரிவு செயலாளருமான மூத்த முன்னோடி சகோதரர் திரு. துரை கோவிந்தராஜன் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இவரது மறைவுக்கு சசிகலா அவர்கள் இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘கழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் அரசு கொறடா, மாநில விவசாயப் பிரிவு செயலாளருமான மூத்த முன்னோடி சகோதரர் திரு. […]
ஆரஞ்ச் பாக்கெட் பால் விலையை லிட்டருக்கு 12 ரூபாய் உயர்த்தியிருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது என சசிகலா ட்வீட். ஆவின் பால் நிறுவனத்தில் வியாபார நோக்கத்திற்கு விநியோகிக்கப்படும் ஆரஞ்சு நிற பால் லிட்டருக்கு 12 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. லிட்டர் 48 ரூபாயிலிருந்து 60 ரூபாயாக உயர்த்தப்பட்டு இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. ஆரஞ்சு நிற பால் விலை உயர்வுக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், வி.கே.சசிகலா இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘திமுக தலைமையிலான அரசு […]