தமிழகம், கர்நாடகா நீதிமன்ற உத்தரவுகளை மதிக்க வேண்டும் – அமைச்சர் ஈஸ்வரப்பா ..!

Karnataka Home Minister Eeswarappa said both Tamil Nadu and Karnataka should respect the Cauvery court orders.

காவிரி  நீதிமன்ற உத்தரவுகளை தமிழகம், கர்நாடகா இருவரும் மதிக்க வேண்டும் என கர்நாடகா உள்ளாட்சித்துறை அமைச்சர் ஈஸ்வரப்பா கூறினார்.

இன்று மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் கர்நாடகாவின் முன்னாள் துணை முதல்வரும், தற்போது உள்ளாட்சித்துறை அமைச்சராக உள்ள ஈஸ்வரப்பா சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஈஸ்வரப்பா, காவிரி  நீதிமன்ற உத்தரவுகளை தமிழகம், கர்நாடகா இருவரும் மதிக்க வேண்டும்.

காவிரி பிரச்சனையை அரசியல் பிரச்சனையாக மாற்றப்பட்டுள்ளது. காவிரி தூய்மையாக உள்ளது. காவிரி தமிழக விவசாயிகளையும், கர்நாடக விவசாயிகளையும் ஆசீர்வதிக்கும். கர்நாடகாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே எந்தவொரு பிரச்சினையும் இல்லை என தெரிவித்தார்.