Tag: kaveri river

காவிரி ஆற்றில் தடுப்பணை என்னவாயிற்று.? பொதுப்பணித்துறைக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

காவேரி ஆற்றில் கட்டப்படவுள்ள தடுப்பணை திட்டம் குறித்த முழு விவரத்தையும் தமிழக பொதுப்பணித்துறை செயலர் பதிலளிக்க வேண்டும். – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு. காவிரி ஆற்று நீர் பெருபாலான நீர் கடலில் கலந்து விடுவதால், காவிரி ஆற்றுநீரை சேமிக்க கரூர் புஞ்சை புகளூரில் தடுப்பணை கட்டபட வேண்டும் என அதற்கான நடடிக்கைகள் முன்னெடுக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இதனை இன்று விசாரித்த நீதிபதி அமர்வு ,’காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்காக […]

- 2 Min Read
Default Image

காவிரி கரையோர மக்கள் கவனத்திற்கு…. மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு.!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் உபரிநீர் அப்படியே திறந்துவிடப்படுகிறது. இதனால், காவிரி கரையோரம் இருக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.  காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருவதால், கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பி, உபரி நீர் காவிரியில் திறக்கப்பட்டு உள்ளது. இதனால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் முழு கொள்ளவு எட்டியுள்ள காரணத்தால் அணைக்கு வரும் நீர் வரத்து அப்படியே திறந்துவிடப்படுகிறது. இதனால், தற்போது மேட்டூர் அணையில் […]

kaveri river 2 Min Read
Default Image

12 தமிழக மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!

மேட்டூர் அணையில் நீர்வரத்து அதிகரித்து வருவதால், தமிழகத்தில் காவிரி கரையோரம் இருக்கும் 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.   காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் கனமழை காரணமாக மேட்டூர் அணை அதன் கொள்ளளவை எட்டியுள்ளது. நீர் வரத்து அதிகமாகியுள்ள காரணத்தால் அணையில் இருந்து நீர் திறந்துவிட படுகிறது. மேலும், காவிரி துணை நதிகளான பாலாறு, சின்னாறு, தொப்பையாறு ஆகிய ஆறுகளின் நீர்பிடிக்குகளிலும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மேலும் மேட்டூர் […]

#Flood warning 3 Min Read
Default Image

தமிழகம், கர்நாடகா நீதிமன்ற உத்தரவுகளை மதிக்க வேண்டும் – அமைச்சர் ஈஸ்வரப்பா ..!

காவிரி  நீதிமன்ற உத்தரவுகளை தமிழகம், கர்நாடகா இருவரும் மதிக்க வேண்டும் என கர்நாடகா உள்ளாட்சித்துறை அமைச்சர் ஈஸ்வரப்பா கூறினார். இன்று மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் கர்நாடகாவின் முன்னாள் துணை முதல்வரும், தற்போது உள்ளாட்சித்துறை அமைச்சராக உள்ள ஈஸ்வரப்பா சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஈஸ்வரப்பா, காவிரி  நீதிமன்ற உத்தரவுகளை தமிழகம், கர்நாடகா இருவரும் மதிக்க வேண்டும். காவிரி பிரச்சனையை அரசியல் பிரச்சனையாக மாற்றப்பட்டுள்ளது. காவிரி தூய்மையாக உள்ளது. காவிரி தமிழக விவசாயிகளையும், கர்நாடக விவசாயிகளையும் […]

Eshwarappa 2 Min Read
Default Image

தொடர் மழையால் அதிகரிக்கும் மேட்டூர் அணையின் நீர்மட்டம்.!

தொடர் மழையால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 6,384 கன அடியாக அதிகரித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அந்த வகையில் தற்போது அணைக்கு வரும் நீரின் அளவு 6563 கன அடியிலிருந்து 6864 கன அடியாக அதிகரித்துள்ளது. எனவே தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 64.64 அடியாக உள்ளது. மேலும் அணையின் நீர் இருப்பு 28.26 டிஎம்சியாகவும் […]

#Mettur Dam 2 Min Read
Default Image

திருச்சி : முக்கொம்பு அணையில் இருந்து கொள்ளிடத்திற்கு நீர் திறப்பு!

கர்நாடக மாநிலத்தில் பெய்த கனமழையின் காரணமாக காவிரி ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் முழுகொள்ளளவை எட்டியது. இதனால் நேற்று 35,000 கனஅடி நீர் அணையில் இருந்து வெளியேற்றபட்டு வருகிறது. இதன் காரணமாக காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தற்போது 45ஆயிரம் கன அடி நீர் திருச்சிக்கு முக்கொம்பு அணைக்கு வந்துகொண்டிருக்கிறது. இதில்  3 ஆயிரம் கனஅடியில் இருந்து 12 ஆயிரம் கனஅடி நீர் வீதம் கொள்ளிடம் ஆற்றுக்கு […]

#Trichy 2 Min Read
Default Image

கல்லணையில் இருந்து பாசனத்திற்க்காக காவேரி நீர் திறப்பு!

தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்ததால் கேரளா கர்நாடக அணைகளில் நீர் நிரம்பியது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர் திறந்து விடப்பட்டது. மேட்டூர் அணையில் நீர் முழு கொள்ளளவை எட்டியதை தொடர்ந்து, சென்ற 13ஆம் தேதி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்த நீர் நேற்று திருச்சி முக்கொம்பு வந்தடைந்தது. அதன் பிறகு, அங்கிருந்து நேற்று இரவு 2 மணிக்கு கல்லணைக்கு வந்து சேர்ந்தது. கல்லணையில் இருந்து இன்று தண்ணீர் பாசனத்திற்க்காக திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீரால் டெல்டா மாவட்டத்திலுள்ள 10.5 லட்சம் […]

#Tanjore 2 Min Read
Default Image

காவிரி – கோதாவரி இணைப்பு! தூர்வாரும் பணிகளை கவனிக்க ஒரு ஐஏஎஸ் அதிகாரி! முதல்வர் அதிரடி!

கர்நாடகாவில் கனமழை பெய்து வருவதால் காவிரியில் வினாடிக்கு 2 லட்சம் கனஅடி வீதம் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம்அதிகரித்ததன் காரமாக காவிரி டெல்டா பாசனத்திற்க்காக மேட்டூர் அணையில் இருந்து முதலமைசார் எடப்பாடி பழனிசாமி திருந்து வைத்தார். தற்போது  மேட்டூர் அணையில் இருந்து 8 மதகுகள் வழியாக வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இது போகப்போக வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நீர் இன்னும் […]

#ADMK 3 Min Read
Default Image

ஒகேனக்கல் காவிரியில் வினாடிக்கு 3 லட்சம் கனஅடி தண்ணீர் வருகை! இன்னும் அதிகரிக்க வாய்ப்பு!

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கேரளா கர்நாடகவில் கடந்த வாரம் முதல் தீவிர மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டு மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதானால் உபரி நீர் அதிகமாக வெளியேற்ற பட்டு வருகிறது. குறிப்பாக காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகமாக இருக்கிறது. ஒகேனக்கல் பகுதியில் காவிரி நீர் வினாடிக்கு 3 லட்சம் கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறதாம். இன்று காலை வினாடிக்கு 2.50 லட்சம் கன அடி தண்ணீர் வந்தது, தற்போது இந்த […]

#Weather 2 Min Read
Default Image

சிறிது நேரத்தில் திறக்க இருக்கிறது மேட்டடூர் அணை..

கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்டுவரும் கடுமையான மழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பியுள்ளன.இதனால் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் உபரி நீர் வெளியேற்றபட்டு வருகின்றன.இந்த உபரி நீர் அதிகமாக வருவதால் ஒகேனக்கல் அணை நிரம்பி வருகிறது. காவிரியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெறுகினால் பல அருவிகள் நீரில் மூழ்கியுள்ளன.ஒகேனக்கலில் குளிக்கவும் தடைவிதிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காவிரி டெல்டா பாசனத்திர்காக மேட்டூர்  அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட இருக்கிறது.முதல்வர் தண்ணீர் திறந்து விடுவது இதுவே முதல் முறை.இன்று காலை 10 மணி அளவில் முதல்வர் […]

#ADMK 2 Min Read
Default Image

நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு.!கர்நாடகா காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு..!

குடகு மாவட்டத்தில் 2 நாட்களாக மழை தொடர்ந்து பெய்து வருகிறது. தலைக்காவிரி பகுதியில் பெய்த மழையால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் காவிரி கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கின் காரணமாக கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. அதேபோல் ஹாரங்கி அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த அணைக்கு வினாடிக்கு 295 கன அடி வீதம் நீர் வருகிறது. கர்நாடக அணைகள் […]

kaveri 3 Min Read
Default Image