நாளை 33 தனியார் நிறுவனங்களுடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்.!

Tomorrow MoUs will be signed with 33 private companies in the presence of the Chief Minister of Tamil Nadu.

நாளை தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில் 33 தனியார் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது.

ஒரு நாட்டின் அல்லது மாநிலத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சியில் தொழில் துறை வளர்ச்சி மிக முக்கிய பங்கு வகிக்கிறது. தொழில் வளர்ச்சியால் அதிகப்படியான தொழிற்சாலைகள் உருவாகும். அதன் மூலம் வேலைவாய்ப்புகள் அதிகரித்து மக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும்.

அந்த வகையில், தமிழகத்தில் முதலீட்டை ஈர்க்கும் வகையில் 33 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது. ரூ.10,000 கோடி முதலீட்டில் 54,041 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் நாளை நடைபெறும் நிகழ்வில் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன.