தமிழகத்தில் 26 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து கூடுதல் தலைமை செயலாளர் பிரபாகர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நேற்று 45 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் இன்று மேலும் 26 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஐபிஎஸ் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்து வருகின்றனர் அந்த வகையில் நேற்று 45 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் இன்று மேலும் 26 பேர் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்பி ஆக ஐ.பி.எஸ் அதிகாரி பொன்னி பணி நியமனம். மாநில மனித உரிமைகள் ஆணையம் எஸ்.பி.யாக ஐ.பி.எஸ் சாந்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை சைபர் கிரைம் பிரிவு எஸ்.பி.யாக ஐ.பி.எஸ் அதிகாரி சண்முகப்பிரியா நியமனம். குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு எஸ்.பி.யாக கிங்ஸ்லின் நியமனம். மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சேலம் மண்டல எஸ்.பி.யாக மகேஷ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
துரை- காவல்துறை தலைமையகம் உதவி ஐஜி தீபா சத்யன் சென்னை ரயில்வே காவல்துறை எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
unknown node