டெல்லி: நடப்பு ஆண்டிற்கான யுபிஎஸ்சி (UPSC) தேர்வுக்கான அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. IAS, IFS, IPS உள்ளிட்ட 23 பதவிகளுக்கு இன்று (ஜனவரி 22) முதல் பிப்ரவரி 11 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மொத்தம் 979 குடிமைப் பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு மே 25ஆம் தேதி நடைபெறவுள்ளது. நாட்டின் மிக உயரிய பதவிகளுக்கான இந்தத் தேர்வை எதிர்நோக்கி காத்திருக்கும் தேர்வர்கள் https://upsconline .gov.in என்கிற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
தமிழக அரசு 16 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர் வழங்கியும், 32 ஐ பி எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்தும் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, சென்னையில் தீவிரவாத தடுப்பு பிரிவு எஸ்.பி.யாக புக்யா சினேக பிரியா நியமிக்கப்பட்டுள்ளார். கோவை தீவிரவாத தடுப்பு பிரிவு எஸ்.பி.யாக வி. சசிமோகன் நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை நகர் வடக்கு சட்ட ஒழுங்கு துணை ஆணையராக ஜி.எஸ் அனிதா நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மத்திய மண்டல பொருளாதார குற்றபிரிவு எஸ்.பி.யாக எம். கிங்ஸ்லின் நியமிக்கப்பட்டுள்ளார். […]
தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உயரதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்தவகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் தமிழகத்தில் 10க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள், 16 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில், தற்போது தமிழகத்தில் மேலும் 11 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, […]
தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சுற்றுலாத்துறை மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழக மேலாண் இயக்குநராகவும், வணிகவரி முதன்மை செயலர் தீரஜ்குமார் தகவல் தொழில்நுட்பத்துறை, டிஜிட்டல் சேவைகள் துறை முதன்மை செயலாளராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழக மேலாண்மை இயக்குநர் ஜெயஸ்ரீ முரளிதரன் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதுபோன்று, பள்ளிக்கல்வித்துறை செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி குமரகுருபரனை நியமித்துள்ளது தமிழ்நாடு அரசு. […]
இன்று தமிழகத்தில் 9 ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் 16 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த அறிவிப்பை தமிழக தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா.ஐஏஎஸ் மற்றும் தமிழக உள்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் ஆகியோர் வெளியிட்டுள்ளனர். தலைமைச் செயலர் சிவதாஸ் மீனா பிறப்பித்த உத்தரவின்படி பணியிட மாற்றப்பட்ட 9 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் பெற்றுள்ள விவரங்கள் பின்வருமாறு… தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இருந்த செந்தில்ராஜ்.ஐஏஎஸ், தற்போது சிப்காட் இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்ட […]
தமிழ்நாட்டின் 20 ஐபிஎஸ் அதிகாரிகள் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் பல ஐபிஎஸ் அதிகாரிகளை இடம் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கூடுதல் தலைமை செயலாளர் பனிந்தர் ரெட்டி, அனுப்பிய ஆணையின் விவரத்தில், 20 ஐபிஎஸ் அதிகாரிகள் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்…#IPSTransfers #IPS #TN pic.twitter.com/PUPsgNtD1G — Dinasuvadu (@Dinasuvadu) December 30, 2022
பயிற்சி முடித்த ஐபிஎஸ் அதிகாரிகள் 9 பேருக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு. தமிழ்நாட்டில் ஐபிஎஸ் உள்பட போலீஸ் உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, சைபர் கிரைம் பிரிவு எஸ்.பியாக மாதவன், கோவை நகர போக்குவரத்து காவல் துணை ஆணையராக அசோக் குமார், கோவை நகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக மதிவாணன், மதுரை மண்டல குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு எஸ்பியாக புக்யா சினேகா பிரியா, […]
IAS, IPS, IFS அதிகாரிகளுக்கான அரையாண்டு மற்றும் மொழித் தேர்வு தேதியை மாற்றம் செய்து டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு. IAS, IPS, IFS அதிகாரிகளுக்கான அரையாண்டு மற்றும் மொழித் தேர்வு (அக்டோபர்-2022 எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வு) நடைபெறும் தேதியை மாற்றம் செய்து டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. அதன்படி, அக்டோபருக்கு பதில் நவம்பர் 1, 2, 3, 4, 5 & 10 ஆகிய தேதிகளில் தேர்வு நடைபெறும் என்றும் விரிவான அட்டவணை http://tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது எனவும் […]
7 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. திமுக தலைமையிலான அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து,ஐபிஎஸ் ,ஐஏஎஸ் அதிகாரிகள் அவ்வப்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில்,7 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.அதன்படி, தமிழ்நாடு சிறப்புப் படை – பட்டாலியன் பிரிவு (மதுரை) கமாண்டண்ட்டாக – தேஷ்முக் ஷேகர் சஞ்சய் நியமனம்.( இதற்கு முன்னர் ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி.யாகப் பதவி வகித்து வந்தார்) ராணிப்பேட்டை மாவட்ட […]
தமிழகத்தில் 26 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து கூடுதல் தலைமை செயலாளர் பிரபாகர் உத்தரவு பிறப்பித்துள்ளார். நேற்று 45 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் இன்று மேலும் 26 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஐபிஎஸ் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்து வருகின்றனர் அந்த வகையில் நேற்று 45 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் இன்று மேலும் 26 பேர் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. […]
தமிழகத்தில் 12 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வு வழங்கி கூடுதல் தலைமை செயலாளர் பிரபாகர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் 12 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வு வழங்கி கூடுதல் தலைமை செயலாளர் பிரபாகர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த 12 பேரில் 3 பேருக்கு கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வும், 9 பேருக்கு பணியிட மாற்றமும் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தீயணைப்புத்துறை டி.ஜி.பி-யாக கரண் சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு […]
12 மாவட்டங்களில் நிவர் புயல் மீட்புப்பணி, நிவாரணப் பணிகளை கண்காணிக்க ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, காஞ்சிபுரம், செங்கல்பட்டுக்கு அன்பு, திருவள்ளூருக்கு வனிதா, விழுப்புரத்துக்கு சத்யப்பிரியா ஐபிஎஸ் நியமனம் திருச்சி, பெரம்பலூர்மற்றும் அரியலூருக்கு ராஜேஸ்வரி, கடலூருக்கு நாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளனர். புதுக்கோட்டைக்கு லலிதா லட்சுமி, தஞ்சைக்கு செந்தில்குமாரி , திருவாரூருக்கு தமிழ்சந்திரன், நாகைக்கு ஜெயராம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய ஆட்சிப் பணி, காவல் பணி ஆகிய பதவிகளில் காலியாக உள்ள 750 இடங்களுக்கான சிவில் சர்வீசஸ் முதல் நிலைத் தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது. IAS, IPS, IFS என்ற பதவிகளில் காலியாக உள்ள 750 இடங்களுக்கானளை சிவில் சர்வீஸஸ் முதல்நிலைத் தேர்வை ( Prelims ) மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் ( UPSC ) நடத்துகிறது. நாடு முழுவதும் 72 நகரங்களில், 2569 மையங்களில் நடைபெறும் இத்தேர்வை 10.58 லட்சம் பேர் […]
போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க புதிய நடைமுறை வெளியாகியுள்ளது. வாகன ஓட்டிகளுக்கும் போக்குவரத்து போலீசாருக்கும் இடையே தகராறு ஏற்படுவதை தடுக்கும் விதமாக, அபராதம் விதிக்கும் முறைகள் புதிய மாற்றத்தை சென்னை காவல் துறையினர் எடுத்து உள்ளனர். வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கும் போக்குவரத்து போலீசார் லஞ்சம் வாங்குவதாக குற்றச்சாட்டு உள்ளது இதற்கு தீர்வாக அபராதத் தொகையை டிஜிட்டல் முறையில் வசூலிக்கும் நடைமுறையை முன்னாள் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் IPS அமல்படுத்தினார் . இருந்தாலும் வாகன […]
சஞ்சித் யாதவை கடத்தி கொலை செய்த வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி அபர்ணா குப்தா மற்றும் துணை எஸ்பி மனோஜ் குப்தா ஆகியோரை இடைநீக்கம் செய்து உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு பிறப்பித்துள்ளார். லேப் டெக்னீசியன் சஞ்சித் யாதவ் என்பவர் கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில், ஐபிஎஸ் அதிகாரி பிபி ஜோக்தாண்டை கடந்த ஜூன் 22-ஆம் தேதி விசாரிக்குமாறு அரசு அறிவுறுத்தியது. இதனைத்தொடர்ந்து விசாரணை நடைபெற்றது .இந்த வழக்கில் இறந்தவரின் நண்பர்கள் உட்பட ஐந்து பேரை கைது […]
கிட்டத்தட்ட 30 தேர்வுகளில் கலந்து கொண்டு தோல்வியடைந்த ஐபிஎஸ் அதிகாரி ஆதித்யா. ஐபிஎஸ் அதிகாரி ஆதித்யா, பஞ்சாப் மாநிலம் சங்ரூரில், கூடுதல் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு சிறுவயதில் இருந்தே ஆட்சிப்பணி தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும் என்ற லட்சியம் இருந்துள்ளது. இவர் பல அரசு பணி தேர்வுகளில் போட்டியிட்டு தோல்வியடைந்து. கிட்டத்தட்ட 30 தேர்வுகளில் கலந்து கொண்டு தோல்வியடைந்துள்ளார். பலருடைய விமர்சனத்திற்கு ஆளான இவர், என் சூழ்நிலையிலும் தனது முயற்சியை மட்டும் கைவிட்டதே கிடையாது. […]
மீண்டும் ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக வர விரும்புவதாகவும், முடியாவிட்டால் வழக்கறிஞராக மாறி மக்களுக்கு சேவை செய்வேன். குஜராத்தின் சூரத் நகரில், ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி காரில் ஊர் சுற்றிய அமைச்சரின் மகனை பெண் காவலர் சுனிதா யாதவ் அதிரடியாகக் கைது செய்தார். இதனையடுத்து, இவர் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், திடீரென இவர் தான் பணியை ராஜினாமா செய்துள்ளார். இதனையடுத்து, காவலர் சுனிதா, நான் எனது வேலையை ராஜினாமா செய்துவிட்ேடன். நான் எனது கடமையைத்தான் செய்தேன். அமைச்சரின் மகன் […]
சென்னையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பல அமைச்சர்கள் கலந்துகொண்டு, டாஸ் போட்டதுடன், பேட்டிங் செய்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இன்று சென்னை கண்ணகி சிலை அருகே உள்ள விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு அகில இந்திய குடிமைப்பணி மற்றும் மத்திய பணி அலுவலர்களுக்கான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அதில் வெள்ளை நிற உடைகளை அணிந்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பல […]
நாட்டின் இளம் ஐபிஎஸ் அதிகாரி என்ற பெருமையை குஜராத்தை சேர்ந்த 22 வயதான ஹாசன் சஃபின் பெற்றுள்ளார். ஹாசன் சஃபின் பேசுகையில் ஐஏஎஸ் அதிகாரி ஆக வேண்டும் என்பதே தனது கனவு. குஜராத் மாநிலம் பனாஸ்கந்தா மாவட்டத்திலுள்ள கனோதார் கிராமத்தை சேர்ந்த சஃபின், கடந்த ஆண்டு நடைபெற்ற மத்திய குடிமை பணிகள் தேர்வில் 570-வது ரேங்கில் தேர்ச்சி பெற்றுள்ளார். தொடர்ந்து ஐ.பி.எஸ் பயிற்சி முடிந்து ஜாம்நகர் மாவட்டத்தில் உதவி காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள சஃபின். இந்நிலையில், வரும் […]
நவம்பர் 2ஆம் தேதி சென்ற சனிக்கிழமை அன்று வாகனங்கள் நிறுத்துவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் வழக்கறிஞர்கள் மற்றும் போலீஸ்காரர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு வன்முறையில் முடிந்தது. இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் மற்றும் வழக்கறிஞர்கள் தங்கள் தரப்பு நியாயங்களை கூறி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் டெல்லி காவல்துறையினருக்கு ஆதரவாக தமிழ்நாடு ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் ஆதரவு கடிதத்தை வெளியிட்டுள்ளது.