மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மாலை கூடுகிறது தமிழக அமைச்சரவைக் கூட்டம்.!

The first meeting of the cabinet chaired by DMK leader MK Stalin will be held tomorrow evening.

திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவையின் முதல் கூட்டம் நாளை மாலை நடைபெறுகிறது.

நாளை காலை 9 மணிக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் தமிழக முதல்வராக பொறுப்பேற்கவுள்ளார். அப்போது முக ஸ்டாலின் உள்ளிட்ட 34 அமைச்சர்களும் பதவி பிரமாணம் செய்கிறார்கள். இந்த நிலையில் நாளை மாலை 4 மணிக்கு முக ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் கூடுகிறது.

முக ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பொறுப்பேற்றபின் நடைபெறும் முதல் அமைச்சரவை கூட்டம் இதுவாகும். இந்த கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை உள்ளிட்டவை தொடர்பாக முக்கிய முடிவு எடுக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.