பொங்கல் பரிசுத் தொகுப்பினை அரிசி அட்டைத்தாரர்களுக்கு வழங்குவது போல் சர்க்கரை அட்டைதாரர்களுக்கும் வழங்க வேண்டும் என்று திமுக அரசிற்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி, பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.1,000 ரொக்க பணம், ஒரு கிலோ பச்சரிசி மற்றும் ஒரு கிலோ சக்கரை வழங்கப்படும் என ஏற்கனவே தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால், இதில் கரும்பு இடம்பெறவில்லை.
இதனால், பொங்கல் பரிசில் கரும்பும் சேர்த்து வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்த நிலையில், பொங்கல் பரிசுத்தொகுப்பில் கரும்பு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து, தற்போது ஓபிஎஸ் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2023 ஆம் ஆண்டுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பினை அரிசி அட்டைத்தாரர்களுக்கு வழங்குவது போல் சர்க்கரை அட்டைதாரர்களுக்கும் வழங்க வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்தியுள்ளார்.
unknown nodeunknown node