முறையான போனஸ் வழங்க வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக அரசு ஊழியர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழக அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். தமிழக அரசு அறிவித்த பொங்கல் போனஸ், அகவிலை படியும் தங்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது எனவும், 2006 போனஸ் திருத்த சட்டதத்தின் படி மத்திய அரசு ஊழியர்களுக்கு […]
ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட ரூ.1000 ரொக்கம் மற்றும் தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரையுடன் முழு கரும்பும் சேர்த்து வழங்கப்படும் என்ற அறிவிப்பிற்கு மநீம வரவேற்பு. பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பும் சேர்த்து வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வாய்த்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், பொங்கல் பரிசுத் தொகுப்பில் பச்சரிசி, சர்க்கரை கரும்புடன் ரூ. 1000 வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்க்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ள நிலையில், தமிழக அரசின் அறிவிப்புக்கு மக்கள் நீதி […]
தைப் பொங்கலுக்கு வேட்டி-சேலை வழங்காததற்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையின் படி, தைப் பொங்கலுக்கு ஏழை-எளிய மக்கள் அனைவருக்கும் உடுக்க உடை என்ற, புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் கனவுத் திட்டம் பாழாகும் சூழ்நிலையை இந்த ஆக்டோபஸ் அரசு ஏற்படுத்தியுள்ளது. 2023-ஆம் ஆண்டு தைப் பொங்கலுக்கு வேட்டி-சேலை வழங்காவிடில், வேலை இழக்கும் நெசவாளர்களையும், ஏமாற்றப்படும் ஏழை, எளிய மக்களையும் ஒன்றிணைத்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மாபெரும் […]
பொங்கல் பரிசுத் தொகுப்பினை அரிசி அட்டைத்தாரர்களுக்கு வழங்குவது போல் சர்க்கரை அட்டைதாரர்களுக்கும் வழங்க வேண்டும் என்று திமுக அரசிற்கு ஓபிஎஸ் வலியுறுத்தல். தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி, பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.1,000 ரொக்க பணம், ஒரு கிலோ பச்சரிசி மற்றும் ஒரு கிலோ சக்கரை வழங்கப்படும் என ஏற்கனவே தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால், இதில் கரும்பு இடம்பெறவில்லை. இதனால், பொங்கல் பரிசில் கரும்பும் சேர்த்து வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை […]
1000 ரூபாய் பொங்கல் பரிசு வழங்க ஏதுவாக நாளை முதல் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு டோக்கன் வழங்க ரேஷன் கடை ஊழியர்க்ளுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த வருடம் பொங்கல் பரிசாக அரிசி ரேஷன் அட்டைதாரர்கள், இலங்கை மறுவாழ்வு மையத்தில் இருப்பவர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசாக 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை உடன் 1000 ரூபாய் பொங்கல் பரிசும் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஜனவரி 2ஆம் தேதி முதல் இந்த பொங்கல் […]